No One Will Save You – 2023

No One Will Save You – 2023 post thumbnail image

No One Will Save You – 2023
Genre: Horror, Sci-fi, Thriller
⭐⭐⭐.5/5

சில பல பிரச்சினைகளால் ஊருக்கு வெளியே உள்ள பெரிய வீட்டில் தனியாக வசிக்கும் பெண். ஒரு நாள் இரவில் ஏலியன்கள் இவளது வீட்டிற்குள் வருகிறது.

ஏன் ஏலியன்கள் வருகின்றன, அவர்களின் நோக்கம் என்ன, இந்த பெண் ஏலியன்களிடம் இருந்து தப்பித்தாளா என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம் ‌.

படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் பரபரப்பு மற்றும் திகில் தொற்றிக் கொள்கிறது ‌.

படத்தில் பெரும்பாலும் பிண்ணணி இசை மற்றும் ஏலியன்களின் சத்தம் ஆக்ரமிக்கிறது ‌. மிஞ்சிப் போனால் இரண்டு வரி டயலாக் தான் இருக்கும் ‌

அந்த வீடு மற்றும் அதன் பிண்ணணி ஹாரர் படத்திற்கு பக்காவாக செட் ஆகி உள்ளது.

ஏலியன்களின் டிசைன் சிம்பிள்ளாக நன்றாகவே உள்ளது. ஏலியன்களின் சர்க்கிள் மார்க் லைட்டாக Signs படத்தை ஞாபகப்படுத்துகிறது.

இந்த படத்தின் க்ளைமேக்ஸ் ஒட்டிய காட்சிகள் சரிவர புரியவில்லை. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி.

எனக்கு ஓரளவு ஐடியா இருக்குது என்ன சொல்ல வர்றாங்க என்று.. ஆனா அத பத்தி பேசுனா ஸ்பாய்லர் ஆகிடும்.

மொத்தத்தில் படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஃப்ரின்ஜ் (Fringe)ஃப்ரின்ஜ் (Fringe)

ஃப்ரின்ஜ் (Fringe) Series Review In Tamil   இது ஒரு ‌மர்மம் மற்றும் அறிவியல் கலந்த மிகப்பெரிய தொடர்…. மொத்தமாக 100 எபிசோட்கள் 5 சீசன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் நீளம்

க்ராவ்ல் (Crawl) – 2019க்ராவ்ல் (Crawl) – 2019

க்ராவ்ல் (Crawl) –  2019  இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிருகத்தின் ‌இடமிருந்து தப்பிப்பது பற்றிய திரைப்படம்.  நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையாக வருகிறார்.‌ஒரு நாள் அவருடைய அக்கா  ஃபோன் செய்து அவர்களுடைய அப்பா ஃபோன் எடுக்கவில்லை என்றும் கடுமையான புயல்