படத்தை பார்த்தவர்களுக்கான த்ரெட்.
🛑 SPOILERS 🛑
இது என்னுடைய புரிதல் மட்டுமே
எதுக்கு இவளை மட்டும் ஏலியன் துரத்துகிறது?
எனக்கு தெரிஞ்சு இவ மட்டும் எதிர்த்து போராடுறா.. மத்தவங்க எல்லாத்தையும் ஈஸியா ஏலியனா மாத்திட்டாங்க. ஹீரோயின் என்பதால் இவருடைய போராட்டம் மட்டும் காட்டப்படுகிறது.
இதுல பிரச்சினை என்னவென்றால் ஹீரோயினின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை ரொம்பவே சிக்கலாக காட்டி இருப்பது. குறிப்பாக வாய்க்குள் அந்த பூச்சி உள்ள போய்ட்டு அதை எடுக்கும் போது வரும் காட்சிகள்.
க்ளைமேக்ஸ் காட்சிகள்:
சின்ன வயதில் நண்பியை தெரியாமல் கொன்று விட்டதால் மன அழுத்தத்தில் இருப்பவள்
அவளை மாதிரியான இன்னொருத்தியை கொல்லும் போது கில்டி ஃபீலிங்ல இருந்து வெளில வர்றா.
கடைசில இவளோட மெமரியை பார்த்துட்டு பாவம் போனு ஏலியனே இவளை ரிலீஸ் பண்ணிடுதுனு நெனைக்கிறேன்.
ஆனா கொடுமை என்னவென்றால் அந்த ஊர்/உலகத்தை ஏலியன் கைப்பற்றி விடுகிறது. கடைசியாக காட்டுறவனுக எல்லாம் ஏலியன்கள் தான்.
ஏனென்றால் அந்த ஊர்ல உள்ளவனுகளுக்கு ஹாய் சொல்றப்ப Screeching னு Subtitle போடுவானுக.. கடைசில மேல பறக்கும் தட்டா காட்டுவாங்க
எனக்கு தெரிந்த வரை அந்த ஊரில் இருக்கும் ஒரே மனித இனம் இவள் மட்டும் தான்.
ஆனால் அதை அவள் விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். ஊர்ல எவனுமே உன்ன காப்பாத்த மாட்டான் நீ தான் உன்னை காப்பாத்திக்கனும் அதான் ‘No one will save you’