Silo – 2023

Silo – 2023 post thumbnail image

Silo Tamil Review 

Silo @AppleTV 

⭐⭐⭐⭐.25/5

10 Episodes (8 Released) 

Tamil Dub ❌ Subs ✅

நல்ல ஒரு Post Apocalyptic Murder Mystery சீரிஸ். 

Silo Tamil review

லொக்கேஷன், நடிப்பு, திரைக்கதை என எல்லாமே அருமை.‌ 

Slow but engaging. 

Recommended 👍

👇

Silo எனும் ஒரு பில்டிங்கில் தொடர் ஆரம்பிக்கிறது.

இந்த Silo பூமிக்கு அடியில் 100 க்கும் மேற்பட்ட தங்களுடன் கட்டப்பட்டு உள்ளது. 

வெளியில் உலகம் அழிந்து போன நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த Silo வில் வாழ்ந்து வருகிறார்கள். 

இவங்களுக்கு என்று ரூல்ஸ் வச்சு இருக்காங்க. அவர்கள் செய்யும் வேலையை பொறுத்து சமூக ஏற்ற தாழ்வுகள் உள்ளது. 

உதாரனமாக ஜட்ஜ், மேயர் , போலீஸ் , டாக்டர் எல்லாம் மேல் தளத்தில் உள்ளார்கள். 

இது தவிர இந்த Silo வை உருவாக்கியவர்கள் யார், இவ்வளவு பிரம்மாண்டமான இடத்தை எப்படி எவ்வாறு உருவாக்கினார்கள் என யாருக்குமே தெரியாது. 

Silo வை இயக்க காரணமாக இருக்கும் மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் கீழே கடைசி தளத்தில் உள்ளார்கள். 

இந்த மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்க்கும் திறமையான ஒரு மெக்கானிக் தான் ஹீரோயின். 

140 வருடங்களாக வசிக்கும் இந்த இடத்தை பற்றி இதுல உள்ள யாருக்குமே எதுவுமே தெரியாது. வெளி உலகத்தை பார்த்ததும் கிடையாது. வெளி உலகம் மற்றும் Silo ஹிஸ்டரி தெரியாத படி பாதுகாக்க ஒரு அமைப்பும் உள்ளது. தெரிந்து கொள்ள முயற்சி செய்தாலே தண்டனைகள் கடுமையாக உள்ளது. 

இந்நிலையில் சில கொலைகள் எதிர்பாராத விதமாக நடக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஹீரோயின் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். 

கொலையை விசாரிப்பதுடன் Silo வின் ஹிஸ்டரியை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதாக போகிறது கதை. 

தொடரில் சஸ்பென்ஸ் பக்காவாக மெயின்டெய்ன் பண்ணி இருக்காங்க. 

8 வது எபிசோட் முடிவுல தான் ஒரு சின்னதாக ஒரு க்ளு கொடுத்தாங்க. 

அதுக்காக பரபரப்பாக போகும் என்று நினைக்க வேண்டாம். மெதுவாக தான் போகும் ஆனால் நல்ல எங்கேஜிங்கா இருக்கும். 

ஃபைனல் எபிசோட் முதல் சீசனை முடிக்கிறதுக்கு பக்காவான எபிசோட் இது.

சூப்பரான ஒரு ட்விஸ்ட் வச்சு ரெண்டாவது சீசன் எதிர்பார்ப்பை எகிற விட்டு இருக்காங்க. 

ஒரு வழியா வெளிய உலகத்தை காட்டிட்டாங்க

Cast : 

Rebecca Ferguson (Dune, MI) 

Tim Robbins ( Shawshank Red

emption , Mystic River)

Iain Glen (GOT) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Enemy – 2013Enemy – 2013

இன்னும் Dennis Villeneuve’s effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.  படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.  IMDb 6.9  ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா

Signal – Sigeuneol- சிக்னல் – 2016Signal – Sigeuneol- சிக்னல் – 2016

Signal – Sigeuneol- சிக்னல் – 2016 – Korean Mini Series Review In Tamil  1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.  தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். 

The Road – 2009The Road – 2009

உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும்  கடற்கரையை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Mc Carthy அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட நல்ல ஒரு டிராமா படம். IMDb 7.2  Tamil dub ❌ OTT ❌ உலகம்