டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. A Space Odessy , Full Metal Jacket , Shining போன்ற தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில் வந்த Sci Fi படம் தான் இது.
IMDb 8.3 ( #114 out of top 250 movies)
Tamil Dub ❌
OTT ❌
எதிர்காலத்தில் நடக்கும் கதை.ஒரு வன்முறை குணம் கொண்ட இளைஞனின் கதை தான் இது.
ஹீரோ தனக்குனு ஒரு குரூப் வச்சுக்கிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுக்கு போய் கொடூரமா கற்பழிப்புனு , கொலை , திருட்டுனு சுத்துறானுக. அவனுக்கு பிடிச்சது மூணு Sex, Violence & Beethoven music.
குரூப்புக்குள் ஏறபட்ட சண்டை மட்டும் உள்குத்து வேலையால் ஹீரோ மட்டும் 14 வருட தண்டனை பெற்று சிறை செல்கிறான்.
கவர்மெண்ட் குற்றங்களை குறைக்க ஒரு புது ஆராய்ச்சி பண்ணுது .சீக்கிரமா ரிலீஸ் ஆகலாம் என ஐடியா பண்ணி தானே முன்வந்து அந்த சோதனைக்கு சம்மதிக்கிறான்.
அது என்னமாதிரியான சோதனை மற்றும் சோதனை வெற்றிகரமாக முடிந்து வெளியே வந்த பின் அவன் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் மீதமுள்ள படம்.
முதலில் இந்த படம் 1971 ல் வநதது என நம்ப முடியாது. செட்டிங்ஸ் எல்லாம் அவ்வளவு மாடர்னாக இருந்த்து.
ஹீரோ அலெக்ஸ் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் படம் முழுவதும் அவன் தான். Malcolm McDowell பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
இதை ஒரு அரசியல் நையாண்டி படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அப்படியே இந்த படத்தை இப்ப எடுத்தாலும் பர்ப்பெக்ட்டா ஃபிட் ஆகும்.
படம் கிட்டத்தட்ட 2.15 மணிநேரம் ஓடுகிறது. ஆனால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.
கண்டிப்பாக பாருங்கள்.
வன்முறை மற்றும் Nudity ரொம்பவே அதிகம்.
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
Watch Trailer:
A Clockwork Orange (1971)
In the future, a sadistic gang leader is imprisoned and volunteers for a conduct-aversion experiment, but it doesn’t go as planned.
ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான். IMDb 7.7 Tamil dub ❌ OTT ❌ போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான
The Lobster – 2015 Movie Review In Tamil இந்த படத்த எந்த கணக்குல சேர்க்குறதனு தெரியல. Sci Fi , Romantic, Comedy, Drama னு சொல்லலாம். இன்னொரு பக்கம் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான or விசித்திரமான
இந்த படத்தின் முதல் பாகம் செமயாக இருக்கும். இதுல வர்ற ஏலியன் சின்ன சத்தம் கேட்டா புயல் வேகத்தில் எங்க இருந்தாலும் வந்து அடிச்சு காலி பண்ணிட்டு போய்டும். IMDb 7.2 Tamil dub ✅ OTT Amazon ஏலியன்களை கொல்லும்