ஒரு பெரிய சதுப்பு நிலம் அதுல தனியா வீடு அதுல ஒரு பொண்ணு மட்டும் வசிக்குது. அந்த பொண்ணோட முன்னாள் காதலன் ஒரு நாள் இறந்து கிடக்கிறான். கொலை செய்தது யார் ? என்பதை சுற்றி நகர்கிறது படம்.
IMDb 7.1
Tamil dub ❌
OTT ❌
மர்டர் மிஸ்டரி படமா பார்த்தால் ஏமாற்றம் தான். தனிமையில் ஒரு பெண் சமூகத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறுகிறார் என்பதை சொல்லும் ஒரு நல்ல படம்.
இதே பேரில் நன்றாக விற்பனையான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். எல்லாரும் நல்லா நடிச்சு இருக்காங்க. ஆனா மெதுவாக போகும் படம். ஒரு தடவ பார்க்கலாம்.
ஒரு பெரிய சதுப்புநில பகுதியில் ஒரு பிணம் கிடக்கிறது. அது அந்த பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் என்பதால் அவளை கைது செய்கிறது போலீஸ்.
அவளுக்காக ஆஜராகும் வக்கீலிடம் தன்னுடைய கதையை சொல்கிறாள் ஹீரோயின்.
1950 களில் ஹீரோயின குடும்பம் சதுப்புநில பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறது.
அவளுடைய அப்பாவின் கொடுமை தாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சிறுமியான ஹீரோயின் தனித்து விட்ப்படுகிறாள் .
தனியாக அந்த ஏரியாவில் எப்படி வளர்ந்தாள். இறந்தவனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு ? கொலை குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வந்தாரா என்பதை மெதுவாக சொல்கிறது படம்.
சதுப்புநில பகுதிகள் அவ்வளவு அழகு.. படத்துக்கு மிகப்பெரிய பலம் லொக்கேஷன்கள்.
அதுவும் காதலனுக்காக வெயிட் பண்ணனும் அந்த பீச் மற்றும் அதன் பிறகு வரும் காட்சிகள் சிறப்பு.
சில லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளன. அந்த கொலையை பற்றிய மர்மம் இன்னும் விளங்கவில்லை.. இன்னொரு டைம் பாக்கணும் போல…