Blumhouse’s
“FIVE NIGHTS AT FREDDY’S” – Trailer & First look
Blumhouse’s “FIVE NIGHTS AT FREDDY’S” – டிரைலர் வெளியிடப்பட்டது.
Blumhouse Productions எப்பவுமே ஹாரர் படங்கள் தயாரிப்பதில் வல்லவர்கள்.
இவர்கள் தயாரிப்பில் வெளியான பல ஹாரர் படங்கள் விமர்சனங்கள் மற்றும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
உதாரனமாக Insidious, Get out , Freaky மற்றும் சமீபத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற M3gan போன்ற படங்களை சொல்லலாம்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஓனரான Jason Blum நேற்று FIVE NIGHTS AT FREDDY’S படத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பு உண்டு என டீஸ் செய்து ட்வீட் போட டிரைய்லர் வெளியீடு என கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.
எதிர்பார்த்தபடியே நேற்று படத்தின் டிரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
FIVE NIGHTS AT FREDDY’S சுருக்கமாக FNAF இதே பெயரில் வந்த வீடியோகேமை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
ஹீரோ ஒரு பாழடைந்த பொழுது போக்கு மையத்திற்கு செக்யூரிட்டியாக வேலைக்கு போறார். அங்க உள்ள 4 பொம்மைகள் இங்க வர்ற யாரையும் உயிரோட விடுவது இல்லை. ஹீரோ நிலைமை என்ன ஆனது என்பதை சுற்றி நகர்கிறது படம்.
டிரைய்லர் அருமையாக இருந்தது. திகில் காட்சிகள், சஸ்பென்ஸ் என எல்லாம் கலவையாக கொடுத்து இருந்தார்கள்.
இந்த படம் October 27, 2023 அன்று தியேட்டர்கள் மற்றும் Peacock OTT இணையத்தில் வெளியாகிறது.
இந்த படத்தின் புது டிரைய்லர்:
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.