Train To Busan – 2016

Train To Busan – 2016 post thumbnail image

Train To Busan – 2016 Korean Movie Review In Tamil 

 

ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். 

 
IMDb 7.6
Language: Korean 
Tamil dub ✅
Available @Primevideo
 
ஆனாலும் ஜாம்பி படம் என்பதால் சில பேர் தவிர்த்து இருக்கக்கூடும். அவர்களையும் பார்க்க வைக்க தான் இந்த போஸ்ட் 😉😉
 
Train to Busan Tamil dubbed movie review, Korean movies in tamil, Hollywood movies review in tamil, watch tamil dubbed movies online free , zombie tam
 
 
இந்த படத்தின் கதையை பார்க்கலாம். ஒரு அதிவேகமாக பயணிக்கும் ரயிலுக்குள் பெரும்பாலானவர்கள் ஜாம்பியாக மாறினால் என்ன ஆகும். ஜாம்பியாக மாறாதவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டனர் என்பதை சொல்லும் படம். 
நிறைய பேர் படத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட சிலரை மையமாக வைத்து படம் நகரும். 
 முன்னாள் மனைவியை பார்க்க மகளுடன் செல்லும் தந்தை, கர்ப்பிணி மனைவியுடன் பயணிக்கும் கணவன், ஆதரவற்ற மனிதர், ஒரு வயதான சுயநலம் படைத்த ஒருவர் , ஒரு பேஸ் பால் டீம் மற்றும் வயதான சகோதரிகள். 
 
இவர்கள் அனைவரும் Busan செல்லும் அதிவேக ரயிலில் பயணம் செய்கிறார்கள். அப்போது ரயில் மற்றும் கொரியா முழுவதும் ஜாம்பி தாக்குதல் நடக்கிறது. இதில் யார் எல்லாம் தப்பித்து மனிதனாக உயிருடன் Busan போய் சேர்ந்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 
 
ஜாம்பி படம் என்பதால் ஒரே குத்து வெட்டு ரத்தம் மட்டும் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். படத்தில் சென்டிமென்ட், குடும்பத்திற்காக செய்யும் தியாகம் என கலக்கலாக படம் நகரும். 
அதுவும் மனிதத் தன்மையை இழந்தவர்களுக்கு அந்த பாட்டி கொடுக்கும் தண்டனை 👌. 
சுயநலம்மிக்க அப்பாவாக (Squid Game ல விளையாட ஆள் பிடிப்பாருல அவரு தான்)  வந்து  கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி செய்யும் தியாகம் என கண்கலங்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. 
 
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் Don Lee . கையில் கிடைத்ததை கவசமாக கையில் கட்டிக்கொண்டு ஜாம்பிகளை டீல் செய்யும் விதம் 🔥🔥🔥🔥
 
சும்மா எப்பவுமே மண்ணு மாதிரி சுத்திக்கிட்டு இருந்த ஜாம்பிகளை வெறி கொண்டு ஓட வைத்த பெருமை இந்த படத்தையே சாரும்.
 
ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே ட்ராக்குகளில் நடக்கும் சேஸிங் தரமா எடுத்து இருப்பார்கள்.
 
ஹாலிவுட் படம் மாதிரி நினைத்து பார்க்காதீர்கள். இது கொரியன் படம் என்பதால் நீஙக நினைக்கும் முடிவு கிடைக்காது.
 
இந்த படத்திற்கு கிடைத்த பெயரை வைத்து‌ வநத இதன் ரெண்டாவது பாகம் Train To Busan: The Peninsula வந்து ஊத்திக்கிச்சு. 
 
ஆனால் இந்த படம் ஜாம்பி படங்களில் ஒரு மைல்கல் . 
 
சில வன்முறை மற்றும் ரத்தக்காட்சிகளை பொறுத்துக் கொண்டால் குடும்பத்துடன் பார்க்கலாம்.
 
தரமான படம். இது வரை பாக்கலனா கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥
 
Trailer: 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Warrior – வாரியர்-2011Warrior – வாரியர்-2011

சென்டிமென்ட் கலந்த பக்கா Action Entertainment. அப்பாவுக்கும் இரு மகன்களுக்கும் இடையே நடக்கும் ஒரு பாசபோராட்டம் பற்றிய கதை. தாயை கொடுமைப்படுத்துவது தாங்காமல், சிறு வயதிலேயே  தந்தையை பிரிந்து தாயுடன் சென்று விடுகிறான் Tommy (Tom Hardy). அந்த சமயத்தில் அண்ணன்

Eye In The Sky – 2015Eye In The Sky – 2015

நம்ம சந்தில் இந்த படத்தை யாரோ ஒருவர் பரிந்துரை செய்து இருந்தார். அருமையான படம்.  IMDb 7.3 Tamil dub ❌ Available @ Amazonprimein மிலிட்டரி தாக்குதல் நடைபெறும் போது தெரியாத்தனமாக அந்த ஏரியாவிற்குள் வரும் சிறுமியால் ஏற்படும் குழப்பம்

The Outsider – 2020The Outsider – 2020

The Outsider – 2020 – HBO Mini Series Tamil Review  Mini Series from HBO:  1 Season, 10 Episodes பிரபல எழுத்தாளர் Stephen King ன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். கொஞ்சம் Supernatural