நம்ம சந்தில் இந்த படத்தை யாரோ ஒருவர் பரிந்துரை செய்து இருந்தார். அருமையான படம்.
Eye In The Sky – 2015
IMDb 7.3
Tamil dub ❌
Available @ Amazonprimein
மிலிட்டரி தாக்குதல் நடைபெறும் போது தெரியாத்தனமாக அந்த ஏரியாவிற்குள் வரும் சிறுமியால் ஏற்படும் குழப்பம் தான் படம்.
கென்யாவில் ஒரு வீட்டில் பல வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் சந்திப்பு நடக்கிறது என்பதை ராணுவம் கண்டுபிடிக்கிறது.
இந்த ராணுவ கூட்டணியில் 3 நாடுகள் உள்ளன கென்யா, இங்கிலாந்து & அமெரிக்கா.
Drone மூலமாக அந்த வீட்டை அழித்து விடலாம் என எல்லாவற்றையும் ரெடி பண்ண அப்போது ஒரு பிரட் விற்கும் சிறுமி அந்த வீட்டிற்கு அருகில் கடை போடுகிறார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தினால் அந்த சிறுமி இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை எப்படி மனிதாபிமான , சட்ட ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு Mission ஐ முடித்தார்கள் என்பது தான் படம்.
சும்மா சொல்லக்கூடாது படம் பரபரவென செம் Gripping. ஒரு டென்ஷன் படம் முழுவதும் இருக்கிறது.
Drone Strike என்றால் ஒரு ஏவுகணையை ஏவி விட்டு காலி பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்கன்னு நினைச்சேன்.
ஆனா எத்தனை அரசுகள், அதிகாரிகள் இதற்கு அனுமதி தரவேண்டும் என விரிவாக காட்டி உள்ளார்கள்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் நடித்த நடிகர்கள். எல்லாரும் அருமையாக நடித்து உள்ளார்கள். Drone operator ஆக வரும் Aaron Paul கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
நல்ல படம் மக்களே.. மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥