You Won’t Be Alone – 2022

ஒரு வித்தியாசமான ஸ்லோவான ஹாரர் படம். 

ஒரு சூனியக்காரி கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகளை புரிந்து கொள்வதைப் பற்றிய படம் இது. 

நிறைய ரத்தக்களரி + Sexual சீன்ஸ் இருக்கு. 

So not for everyone ❌

19 வது நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் குழந்தையை அபகரிக்க வருகிறாள் ஒரு சூனியக்காரி . குழந்தையின் அம்மா 16 வயசுக்கு அப்புறம் நீ இவளை எடுத்துக்கோ என டீல் போட்டு குழந்தையை கோவில் போல் உள்ள மலைப்பகுதியில் யார் கண்ணிலும் படாமல் வளர்த்து வருகிறாள். 

ஆனால் 16 வயது ஆனதும் சூனியக்காரி வந்து இந்த பொண்ணை கூட்டிட்டு போய் சூனியக்காரியா ஆக்கி விட்டுவிடுகிறாள். 

இந்த சூனியக்காரி நினைத்தால் ஒரு ஆளை போட்டுததள்ளி விட்டு அவர்கள் போலவே மாறிவிடலாம். 

இந்த புது சூனியக்காரி,  பெண், இளைஞன் என வகை வகையாக உருமாறி மனித உணர்வுகளை தெரிந்து கொள்வது தான் படம். 

இந்த உருமாறும் காட்சிகள் கொடூரமா இருக்கும். 

Witch படங்களில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. படம் மெதுவாக தான் போகும் பொறுமை வேண்டும். ரொம்ப மியூஸிக் வைச்சு பயமுறுத்தும் காட்சிகள் எல்லாம் கிடையாது. 

எனக்கு பிடித்து இருந்தது.வித்தியாசமான ஹாரர் படம் பார்க்க விரும்பும் நண்பர்கள் பார்க்கலாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

No Exit – 2022No Exit – 2022

No Exit – 2022 Hulu Movie Tamil Review  நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .  புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட

Train To Busan – 2016Train To Busan – 2016

Train To Busan – 2016 Korean Movie Review In Tamil    ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.    IMDb 7.6 Language: Korean  Tamil

In Bruges – 2008In Bruges – 2008

In Bruges Tamil Review  இது ஒரு நேர்த்தியான டார்க் காமெடி திரில்லர்.  காசுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்பவர் தான் ஹீரோ. அவரோட இன்னொருத்தர் கூட வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சைக்கோ பாஸ்ஸிடம் வேலை பார்க்கிறார்கள்.   IMDb 7.9