The Invisible Man – 2020

தரமான Sci Fi , Horror படம்.

கொடுமைப்படுத்தும் ஒரு விஞ்ஞானியான கணவரிடம் இருந்து தப்பித்து வருகிறார் ஹீரோயின். 

IMDb 7.1

Tamil dub ❌

OTT ❌

கணவன் தற்கொலை செய்து இறந்து விடுகிறான். செத்தாலும் விட மாட்டேன் என விரட்டுகிறான்.எப்படி என்று படத்தில் பாருங்கள். 

Optics துறையில் வல்லவரான ஒரு சைக்கோ விஞ்ஞானியின் மனைவி (Cecilia – Elizabeth Moss). அவனிடமிருந்து ஒரு நாள் தப்பித்து நண்பரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார். சில நாட்களில் கணவன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என செய்தி வர நிம்மதி அடைகிறாள். 

ஆனால் நிம்மதி கொஞ்ச நாள் கூட இல்லாமல் தனது கணவன் இவளை பின்தொடர்ந்து வருவது போல தோன்றுகிறது. 

சிறிது நாளில் பின்தொடர்வது போல தோன்றுவது வன்முறையாக மாறி அவளைச் சுற்றி இருக்கும் சில பேர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஆனால் யார் தாக்குகிறார்கள் என்பது கண்ணுக்கு தெரியவில்லை. 

கணவன் இறந்தது உண்மை தானா  ? யார் இவளை பின்தொடர்ந்து வருவது ? என்பதை படத்தில் பாருங்கள். 

படத்தின் ஆரம்ப காட்சிகள் மிகவும் அருமை. நல்ல சஸ்பென்ஸ் உடன் படம் நகர்கிறது. 

சில காட்சிகள் நம்மளே இதுக்கு தான் வைக்கிறாங்க என்பதை கண்டுபிடித்து விடலாம். 

மற்றபடி நல்ல பரபரவென சஸ்பென்ஸ் உடன் போகிறது படம். 

படம் முழுவதும் ஹீரோயினை சுற்றியே நகர்கிறது. ஹீரோயின் நன்றாக நடித்து இருக்கிறார். The Handmaid’s Tale Series பார்த்தவர்களுக்கு இவரது நடிப்பை பற்றி தெரிந்து இருக்கும். 

கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Dune – 2021Dune – 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்.  இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும்.  IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை.  இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம்.

I am mother – ஐ ஆம் மதர் (2019)I am mother – ஐ ஆம் மதர் (2019)

I am mother – ஐ ஆம் மதர் (2019) – Movie Review In Tamil  இது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.  மனித இனம் கூண்டோடு அழிந்து விட்டால் மறுபடியும் மனித இனத்தை முதலில் இருந்து உருவாக்க

Nope – 2022Nope – 2022

Nope Tamil Review Get Out என்ற அருமையான ஹாரர் படத்தை கொடுத்த Jordan Peele இயக்கத்தில் வந்து இருக்கும் படம்.  இன்னொரு ஹாரர் படம் ஆனால் ஏலியன்ஸ் வச்சு பண்ணி இருக்கார்.  IMDb 7.2 Tamil dub ❌ படத்தோட