Confession Of Murder – 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌. 

IMDb 7.0

Tamil dub ❌

OTT ❌

சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும் என்ன தொடர்போ.. அடிக்கடி தரமான சீரியல் கில்லர் படங்கள் இவர்களிடம் இருந்து வரும். 

ஒரு நாள் சீரியல் கில்லர் பத்திரிகை கூட்டம் நடத்தி 15 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த 10 இளம்பெண்களை கொலை செய்தது நான் தான் என்கிறான். மேலும் அதை நிரூபிக்க அந்த கொலைகளை பற்றி டீடெய்லா  புக் போட்டு பெரிய அளவில் கல்லா கட்டுகிறான். 

இவன் தான் அந்த கில்லர் என்பதை நிருபிக்க அந்த வழக்குகளை விசாரித்த போலீஸ் அதிகாரியையும் உள்ளே இருக்கிறான். 

இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சொந்தக்காரர்கள் ஒரு குரூப்பாக இணைந்து சீரியல் கில்லரை போட்டுத்தள்ள முயற்சி செய்கிறார்கள். 

இதற்கு நடுவில் இன்னொருத்தன் நான் தான் அந்த கொலைகாரன் என்று வருகிறான். போலீஸ்காரர் யாரு தான்டா உண்மையான கொலைகாரன் என்பதே கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். கடைசில யாரு உண்மையான கொலைகாரன் என்பதை படத்தில் பாருங்கள். 

நல்ல புதுமையான கதைக்களம். நல்ல சஸ்பென்ஸ் உடனேயே படம் நகர்ந்த விதம் அருமை. 

குறிப்பாக நான் தான் ஒரிஜினல் கொலைகாரன் என ஒருத்தன் லைவ் நிகழ்ச்சியில் போனில் பேசும் காட்சிகள் அருமை .  டிவி நிகழ்ச்சிகள் படத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. 

பிற்பகுதியில் நிறைய ட்விஸ்ட்டுகள் உள்ளது. 

கொரியன் படங்கள் எவ்வளவு கொடூரமான படங்கள் எடுத்தாலும் சென்ட்டிமென்ட்டை சரியான அளவில் சேர்த்து இருப்பாங்க . இந்த படத்திலும் கரெக்டா யூஸ் பண்ணி இருக்காங்க. 

கொரியன் படங்கள் எப்பவுமே ரியலா இருக்கும். ஆனால் இந்த படத்தில் கார் சேஸ் காட்சிகள் ரொம்பவே unreal ல இருந்துச்சு. ஹாலிவுட் படங்களை பார்த்து கெட்டு போய்ட்டானுக போல 🚶

மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் இல்லை கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Pirates : The Last Royal TreasureThe Pirates : The Last Royal Treasure

Korea வில் இருந்து வந்து இருக்கும் Pirates of the Caribbean வகையிலான படம்.  ஆக்சன், அட்வென்ட்சர் மற்றும் காமெடி கலந்த லோ பட்ஜெட் treasure hunt பற்றிய பொழுது போக்கு படம். IMDb 6.0 Tamil dub ❌ Available

Jurassic Park – 1993Jurassic Park – 1993

Jurassic Park – 1993 – சிறுவயதில் படம் பார்த்த அனுபவம்  எனக்கு இந்த படத்தை பத்தி எழுதனும்னு ரொம்ப நாளாக  ஆசை. ஆனா பெரும்பாலானோர் பாத்து இருப்பாங்க . அதனால் முதன் முதலில் இந்த படத்தை பார்த்ததை பற்றி  எழுதலாம்

The Shape Of Water – 2017The Shape Of Water – 2017

The Shape Of Water 4 Oscar வாங்குன Sci Fantasy Romance!!!, Thriller.  1960 வருடத்தில் வாய் பேச முடியாத இளம்பெண்ணுக்கும்,  ஏலியன்+மீன் மாதிரி இருக்கும் ஒரு மிருகத்துக்குமான Relationship பற்றிய படம்.  IMDb 7.3 Tamil dub இல்லை.