The Terror Live – 2013

 இது ஒரு பக்கா கொரியன் திரில்லர் .

ஹீரோ ஒரு பிரபலா டிவி ரிப்போர்ட்டர் ஆனால் சரியா டைம் Workout ஆகாம ரேடியோ ஜாக்கியா Demote ஆனவர். 

ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபலமாக முயற்சி செய்கிறான். அது அவனுக்கு வினையாக முடிகிறது.  

ஒரு நாள் ப்ரோக்ராம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் லைன்ல வந்து நான் ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்க்க போகிறேன் என மிரட்டுகிறான். 

ஹீரோவும் யாரோ விளையாடுறாங்க என்று கண்டுக்காமல் விட்டு விடுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் பாலம் வெடித்து சிதறுகிறது ‌‌. 

உடனே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஹீரோ போலீஸிடம் சொல்லாமல் இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பிரபலமாக ஃப்ளான் பண்றான். 

. மறுபடியும் கால் பண்ணும் வில்லன் ஒரு சம்பவத்தை சொல்லி அதற்கு அந்த நாட்டின் அதிபர் உடனே 10 நிமிஷத்துல ஸ்டுடியோக்கு வந்து மன்னிப்பு கேட்கனும் என்ற கோரிக்கை வைக்கிறார். இல்லைனா இன்னும் நிறைய குண்டு வெடிக்கும் என்கிறான். 

வில்லன் மற்றும் அரசுக்கு இடையே சிக்கிக்கொண்டு ஹீரோ படும் பாடு தான் படம்.

படத்தை சஸ்பென்ஸ் ஆகவே நகர்த்தி இருக்கிறார்கள்.  ஹீரோவை அவன் இடத்தில் இருந்து நகர முடியாமல் செய்வது, சில விஷயங்கள் தெரிந்தும் வெளியே சொல்ல முடியாதவாறு ப்ளாக் மெயில் செய்வது என வில்லனுக்கு ஹெவியான ரோல் ‌.

இவ்வளவுக்கும் வில்லன் கடைசி 10 நிமிஷம் தான் திரையில் வருகிறார். 

செம டைட்டான திரைக்கதை விரு விருப்பாக செல்கிறது படம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத வண்ணம்

அருமையான இயக்கம். 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Vadh – 2023 – HindiVadh – 2023 – Hindi

Vadh Movie Tamil Review   @NetflixIndia   #crime #thriller #Hindi #Tamil ❌ ⭐⭐⭐ .75 /5 வாங்கிய கடனுக்காக ரவுடிகளால் தினமும் டார்ச்சர் செய்யப்படுகிறார் ஒய்வு பெற்ற ஆசிரியர். ஒரு நாள் நடைபெறும் சம்பவம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது  –

The Sea Beast – 2022 [Animation]The Sea Beast – 2022 [Animation]

The Sea Beast – 2022 [Animation] – Review In Tamil ஒரு கற்பனையான நாடு அங்கு உள்ள கடலில் பெரிய பெரிய கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனை‌ வேட்டையாட திறமையான வேட்டைக்காரர்கள் உள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து ஒரு

Calibre – காலிபர் (2018)Calibre – காலிபர் (2018)

இது ஒரு நல்ல திரில்லர் திரைப்படம். Netflix நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. IMDb -ல் ரேட்டிங் நன்றாக இருந்ததால் இந்த படத்தை பார்த்தேன். படம் கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது . ஆனால் ஒரு சம்பவத்திற்கு பிறகு பரபரப்பாக நகர்கிறது.  வான்