CODA (Children Of Deaf Adults) – 2021

Apple TV+ வெளியிட்ட ஒரு Feel Good + Musical படம். 

 
ஹீரோயின் குடும்பத்தில் அவளை தவிர வேற யாருக்கும் காது கேட்காது. 
 
இவளை நம்பி தான் குடும்ப பிசினஸ் இருக்கும் நிலையில் அவளது Passion க்காக குடும்பத்தை பிரிய நேரிடுகிறது. இதனை மொத்தக் குடும்பமும் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை +VE  சொல்கிறது படம். 
 
IMDb 8.1 
Tamil dub ❌
Tamil sub ✅
CODA - Children Of Deaf Adults movie review in tamil, coda movie about deaf kids, feel good movie , apple tv release, feel good movies of 2021. Locke
 
 
ரொம்பவே அருமையான ஃபீல் குட் படம்.
 
ஹீரோயின் குடும்பம் மீன்பிடிக்கும் தொழில் செய்கிறார்கள்.பொறுப்பான மகளாக  காலையில் 3 மணிக்கு எழுந்து குடும்பத்துடன் கடலுக்கு போய் மீன் பிடித்துவிட்டு வந்து ஸ்கூலுக்கு போகிறாள் . 
 
ஹீரோயினுக்கு Berklee காலேஜ்ஜில் மியூசிக் படிக்க ஆசை.  ஆனால் அப்பா , அம்மா மற்றும் அண்ணண் என யாருக்கும் காது கேட்காது என்பதால் இவர் தான் மற்றவர்களுடன் பேச உதவி செய்ய வேண்டிய கட்டாயம். 
 
இந்நிலையில் ஸ்கூல் டீச்சர் மூலமாக Berklee college audition போக சான்ஸ் கிடைக்கிறது. குடும்பத்தையும் விட முடியாமல் தன் Passion யும் தொடர் முடியாமல் தவிக்கும் ஹீரோயின் கதை தான் இந்த படம். 
 
அம்மா , அப்பா மற்றும் அண்ணனாக வரும் மூவரும் நடிப்பில் அசத்தி உள்ளார்கள். 
 
நிறைய கண்கலங்க வைக்கும் (அழுகாட்சி இல்லை) காட்சிகள் மற்றும் மனதை லேசாக்கும் காட்சிகள் உள்ளன.
 
குறிப்பாக இசையை எப்பிடி ஃபீல் பண்ற என்று டீச்சர் கேட்கும் காட்சி, அம்மா தனது மகள் பிறந்த சமயம் நடநத நிகழ்வுகளை சொல்லும் காட்சி, க்ளைமாக்ஸ்க்கு முன்னாடி அப்பா மற்றும் மகள் பேசும் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் என அருமையான காட்சி அமைப்புகள். 
 
ஃபீல் குட் மூவிகே உண்டான செட் அப்ஸ் மற்றும் சிம்பிளான கதையை நாமே கணித்து விடலாம்.
 
ஆனா மீன்பிடிக்கும் குடும்பம் , சின்ன ஊர் என அழகான காட்சியமைப்பை  வைத்து அருமையான படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
 
ஹீரோயின்  Emilia Jones அழகாக இருக்கிறார்.. கேரக்டருக்கு பக்காவா பொருந்தி உள்ளார். 
Locke & Key தொடரில் நடித்து இருக்கிறார் போல. 
 
Music Teacher ரோல் மட்டுமே கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது.
 
மொத்தத்தில் பெண் இயக்குனர் Sian Heder டம் இருந்து தரமான படம். 
 
Totally very good  Film.. Must Watch 👐👐
 
Ruby is the only hearing member of a deaf family from Gloucester, Massachusetts. At 17, she works mornings before school to help her parents and brother keep their fishing business afloat. But in joining her high school’s choir club, Ruby finds herself drawn to both her duet partner and her latent passion for singing.
 
Director: Sian Heder
 
Starring: Emilia Jones; Eugenio Derbez; Troy Kotsur; Ferdia Walsh-Peelo; Daniel Durant; Marlee Matlin
 
Watch Trailer: 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

God’s Crooked Lines – 2022 – SpanishGod’s Crooked Lines – 2022 – Spanish

God’s Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review  பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body, The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம். அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா

The Menu – 2022The Menu – 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில்

The Bad Guys (Sheesh) – 2022The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.  ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.  IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்