Babadook – 2014

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த Psychological Thriller + Horror படம். 

ரொம்ப நாள் கழித்து பார்த்த சூப்பரான பேய் படம்

வழக்கமான பேய் படம் போல் பயமுறுத்தாமல் மனித உணர்வுகள் மற்றும் அதன் தன்மை மாறும் போது என்ன நடக்கும் என்பதை சொல்கிறார் இயக்குனர். 

IMDb 6.8

Tamil dub ❌

Available @ Prime

Babadook Australian horror movie review in tamil, movies based on folklore, movies based on book and happening in a house .

கணவனை இழந்த பெண் மற்றும் அவளது சிறுவயது மகன் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். மகன் பயங்கர ஆக்டிவ் + சும்மாவே பேய் வருது வருதுனு சொல்லிட்டே இருக்கான். 

ஒரு நாள் Mister Babadook என்ற சிறுவர்களுக்கான புத்தகத்தை மகனுக்கு படித்துக் காட்டுகிறார். அதிலிருந்து அவன் ரொம்பவே பேய் வருது என்று இரவு முழுவதும் பயந்து அவளை தூங்கவிடாமல் செய்கிறான். 

சில நாட்களில் இவளுக்கும் ஏதோ வித்தியாசமாக தோன்றுகிறது . மருத்துவரிம் சென்று தூக்கமாத்திரை வாங்கி சாப்பிடுகிறாள்.தொடர்ந்து தூக்கம் இல்லாதது + மாத்திரை எல்லாம் சேர Hallucination வர ஆரம்பிக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து அவளுடைய நடத்தைகள் வன்முறையாக மாறுகிறது.

இவளிடம் வீட்டில் மாட்டிக்கொண்ட சிறுவன் என்ன ஆனான் உண்மையில் Babadook இருக்கிறதா இல்லை கற்பனையா என்பதை படத்தில் பாருங்கள். 

அம்மா , மகன் இரண்டு பேர் நடிப்பும் கலக்கல்

படம் மெதுவாக போனாலும் கடைசி 30 நிமிடங்கள் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறது. 

கண்டிப்பாக பார்க்கலாம் 👍

My Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Prisoners – பிரிசனர்ஸ்- 2013Prisoners – பிரிசனர்ஸ்- 2013

X-Men ஹீரோ மற்றும் The Prestige படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த  Hugh Jackman நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Suspense Thriller. Thanks Giving நாளன்று Dover (Hugh Jackman) தன் குடும்பம் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் தன்

Only Murders in the building – 2021Only Murders in the building – 2021

Only Murders in the building Tamil Review இது‌ ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each

Infinity Pool – 2023Infinity Pool – 2023

 Infinity Pool – 2023 #scifi #horror  ⭐⭐⭐/5 Tamil ❌ ஹீரோ டூர் போற தீவுல தப்பு பண்ணி மாட்டுனா குற்றவாளியை அப்படியே மெமரியோட காப்பி பண்ணி அந்த காப்பியை கொன்னுடுவாங்க. இதுல மாட்ற ஹீரோவோட கதை.  – Sexual