Crime Stories: India Detectives – 2021

இது ஒரு டாக்குமெண்டரி க்ரைம் மினி சீரிஸ். 

1 Season , 4 Episodes 

Netflix ல தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ல் இருக்கு . 

நம்ம US, UK Crime detective சீரிஸ் எல்லாம் நிறைய பார்த்துருப்போம். ஆனா நம்ம போலீஸ் எப்படி கேஸை அணுகுகிறார்கள் மற்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை ஆராயும் தொடர். 

Netflix ல் வெளிவந்து இருக்கிறது. இது மாதிரி நம்ம ஊரு போலிஸை வைச்சு டாக்குமெண்டரி எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. 

காவல்துறை அதிகாரிகளை பாஸிட்டிவ்வாக காண்பித்தற்காக கண்டிப்பாக இந்த டாக்குமெண்டரி குழுவை பாராட்டியே ஆக வேண்டும். 

இந்த சீசனில் மொத்தம் நான்கு குற்றங்களை பற்றி சொல்கிறது.  அனைத்தும் பெங்களூருவை சுற்றி நடக்கும் சம்பவங்கள்.

எதுவுமே ரொம்ப சிக்கலான பல திருப்பங்கள் கொண்ட கேஸ் கிடையாது. ரொம்பவே இயல்பான வழக்குகள் மற்றும் அதை எவ்வாறு காவல் துறை அணுகுகிறது என்பதை சொல்கிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ்காரர்களின் குடும்பமும் பற்றியும் சிறிது சொல்லப்படுகிறது.

கடைசி 2 கேஸை விசாரிப்பது பெண் அதிகாரிகள் என்பது கூடுதல் சிறப்பு.

முதல் எபிசோடில் ஒரு தாய் மற்றும் மகன் தாக்கப்படுகிறார்கள் . தாய் இறந்துவிட மகன் உயிருக்கு போராடுகிறார். 

யார் கொலைகாரன் என்பது அதிர்ச்சி மற்றும் குறிக்கோள் என்ன என்பதை கண்டுபிடிக்கிறது போலீஸ். 

இரண்டாவது எபிசோடில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டு பொது இடத்தில் உடல் வைக்கப்படுகிறது. இறந்தவனின்  தாய் அவனின் மனைவி மற்றும் மாமியாரை குற்றம் சாற்றுகிறார்.

மூன்றாவது எபிசோடில் கணவனை பிரிந்து  டீன் ஏஜ் மகனுடன்  தனியாக  வசித்து வரும் ஒரு தாய் கொடூரமாக கொல்லப்படுகிறார். இதை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வருகிறது.

பெங்களூருவின் சோகமான இன்னொரு பக்கம் காட்டப்படுகிறது. 

அந்த பெண்ணை கொலை செய்ததற்கான காரணம் அதிர்ச்சி … 

4 வந்து எபிசோட் சாலை ஓரத்தில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 1.5 வயது குழந்தை கட்த்தப்படுவதை பற்றியது.

நல்ல டாக்குமெண்டரி.. ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். 

வொர்த்து 🔥🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Cold Case – கோல்ட் கேஸ் – 2021Cold Case – கோல்ட் கேஸ் – 2021

இது ஒரு மலையாள திரைப்படம்.  என்னமோ இந்த Signal சீரியல் பார்ததுல இருந்து இந்த Cold Case என்ற வார்த்தைகள் மேல் ஒரு ஈர்ப்பு… ட்ரெய்லர் நல்லா இருந்தது .. அது போக ப்ரித்விராஜ் போலீஸ் யூனிஃபார்ம்ல கலக்கலா இருந்தார். இது

Indian Predator: The Butcher Of Delhi- 2022Indian Predator: The Butcher Of Delhi- 2022

Indian Predator: The Butcher Of Delhi – Tamil Review  தலைநகரில் 2003 ஆம் வருடத்தில் இருந்து ஏகப்பட்ட கொலைகளை செய்து பிணத்தின் தலைகளை திஹார் ஜெயில் வாசலிலேயே போட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்த ஒரு சீரியல் கில்லர்

Read My Lips – 2001 (French)Read My Lips – 2001 (French)

Read My Lips – 2001 (French)  காது கேட்காத ஆனா உதடுகள் அசைவது  மூலமா சொல்வதை புரிந்து கொள்ளும் பெண்ணும் பெயிலில் உள்ள கைதியும் மாறி மாறி திருட்டுத்தனம் பண்ண உதவி செய்து கொள்கிறார்கள்‌.நல்ல ஒரு ரொமான்டிக் திரில்லர்  நடிப்பு