Finch – 2021

Finch – 2021 Movie Review In Tamil

பெரிய தலை Tom Hanks (The Green Mile , Forrest Gump), Sci Fi ,Post Apocalyptic , Road trip .. இது போதாதா படம் பார்க்க. 

Apple TV ல போன வாரம் வெளிவந்த படம் இது. 

IMDb 7.0

தமிழ் டப் இல்லை.

Finch 2021 movie review in tamil, Tom Hanks movie, Robot films, artificial intelligence based movie, rover, Jeff Movie, movies like district 9 and Cha

படத்துல கதை எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல. நல்ல ஒரு road trip movie. 

ஓசோன் லேயர் மொத்தமா காலி ஆகிறுது. அதனால் சூரிய வெளிச்சம் உடம்பில் பட்டாலே  fry ஆகுற அளவுக்கு வெயில். பெரும்பாலான உலகம் அழிந்து விட்ட நிலையில் தப்பித்தவர்களில் Finch ( Tom Hanks ) ஒருவர். அவரும் ஏதோ உயிர் கொல்லி நோயினால் அவதிப்படுகிறார்.

இவருக்கு துணை ஒரு நாய் மற்றும் ஒரு ரோபோ. நாய் மீது பாசத்துடன் உள்ள பெரிய ரோபாடிக் இஞ்சினியர் ஆன Finch தான் இறந்த பின்பு நாய்க்கு துணையாக இருக்க கிடைத்த பொருட்களை வைத்து இன்னொரு அதிநவீன ரோபோ ஒன்றை தயார் செய்கிறார். 

இந்நிலையில் ஒரு பெரிய புயல் அந்த ஏரியாவை தாக்க வருகிறது. அதனால் 4 பேரும் அவருடைய லேப்பை விட்டு விட்டு  San Francisco பக்கம் கிளம்புகிறார்கள். 

இந்த பயணத்தில் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு நாயுடன் பழகி நட்பாக மாறுவதை சொல்வது தான் படம். 

படத்தின் பலம் சந்தேகமே இல்லாமல் Tom Hanks தான். நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் மனுஷன்.

ஒருத்தர மட்டுமே வைச்சு படம் எடுக்க தைரியம் வேண்டும் நமக்கும் அத பாக்க பொறுமை வேண்டும்.  தனியாவே ஒரு‌ ஃபுட்பால் வைச்சு இதே மாதிரி படத்தை ஓட்டுன மனுஷன் இவரு அதுனால ரோபோ கூட நடிக்கிறது Hanks க்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

ஆரம்பத்தில் முட்டாள் போல உள்ள ரோபோ பண்ணும் சேட்டைகள், அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷன்கள் ரசிக்கும் விதமாக உள்ளன. 

சில இடங்களில் படம் மெதுவாக சென்றாலும் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 

 

Director: Miguel Sapochnik

Starring: Tom Hanks; Caleb Landry Jones

Music by: Gustavo Santaolalla

My Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Post Apocalyptic Movies – Part 2Post Apocalyptic Movies – Part 2

Post Apocalyptic Movies – Part 2  1. The Road உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையில் ஏதாவது வாழ வழி கிடைக்குமா என அதை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Full Review 2. What

Titane – 2021Titane – 2021

Titane – 2021 Tamil Review  இது ஒரு French Sci-fi , Horror , Thriller .  இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  படத்தோட ஹீரோயினுக்கு சின்ன

Boss Level – 2021Boss Level – 2021

இது ஒரு Sci Fi + Time loop Concept படம். கொஞ்சம் Comedy + நிறைய Action.  படம் பார்த்தற்கான காரணங்கள்.  Mel Gibson, Naomi Watts and Time Loop concept.  படத்தை பத்தி முடிஞ்ச வரைக்கும் ஸ்பாய்லர்