Alita – Battle Angel – 2019

Alita – Battle Angel – 2019 post thumbnail image

 

இது ஒரு Sci Fi , Adventure படம். 

 
இந்த படம் பார்ததற்கான முதல் காரணம் திரைக்கதை எழுதியவர் James Cameron மற்றும் இதன் இயக்குனர் Robert Rodriguez . 
 
உலகம் அழிந்து 300 வருடங்களுக்கு பின்பு ஒரு Cyborg க்கு உயிர் வருகிறது. ஆனால்  அதற்கு எதுவுமே நினைவில் இல்லை. அது தன்னுடைய பழைய நினைவுகளை எப்படி பெறுகிறது என்பது தான் படம்.
 
Alita battle angel movie review in tamil, alita battle angel IMDb, James Cameron Movie, Robert Rodriguez director, Sci Fi movie, adventure, distopian

 
படம் நடப்பது Iron City என்ற ஊரில். உலகம் அழிந்து போன பிறகு மிச்சம் இருந்த அனைவரும் இங்கு வந்து வாழ்கிறார்கள். 
 
இந்த ஊருக்கு மேலே அந்தரத்தில் ஒரு பெரிய நகரம் மிதந்து கொண்டு இருக்கிறது. நடந்த போரில் மிச்சம் உள்ள ஒரே ஊர் அதுதான். அங்கு போனால் சகல வசதிகளுடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. 
Iron City -ல் வாழும் பெரும்பாலான நபர்களுக்கு அதுதான் கனவு. 
 
அங்கு செல்ல நிறைய பணம் வேண்டும் இல்லை மோட்டார் பால் என்ப்படும் விளையாட்டு டோர்னமென்டில் வென்றால் அங்கு செல்ல அனுமதி கிடைக்கும். 
மோட்டார் பால் என்பது அவங்க ஊர் ஃபுட்பால் + ஸ்கேட்டிங் கலந்து விளையாடப்படும் ஆபத்தான விளையாட்டு. 
 
Scrapyard ல் இருந்து ஒரு Cyborg -ஐ கண்டுபிடித்து உயிர் கொடுக்கிறார் ஒரு விஞ்ஞானி. அந்த Cyborg தான் ஹீரோயின். 
 
ஒண்ணுமே தெரியாமல் இருக்கும் ஹீரோயின் அவரை வளர்க்கும் சயின்ட்டிஸ்ட் உயிருக்கு ஆபத்து என்றவுடன் படுபயங்கரமாக சண்டை போட்டு எதிராளி களை கொல்கிறாள். அப்போது லைட்டாக பழைய ஞாபகம் வருகிறது.
 
இதற்கு நடுவே சயின்ட்டிஸ்ட்க்கு உதவி செய்யும் ஒரு இளைஞனுடன் ஹீரோயினுக்கு காதல். 
 
ஒரு கட்டத்தில் இருவரும் மேல் உள்ள நகரத்துக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஹீரோயின் அதற்காக motor ball விளையாட தயார் ஆகிறாள்.
 
 இன்னொரு பக்கம் ஹீரோயினின் பவர் தெரிந்து அவரது டெக்னாலஜியை அபகரிக்க வில்லன் கூட்டம் ப்ளான் போடுது. 
 
இவ்வளவு பிரச்சினையும் கடந்து மேலே உள்ள நகரத்துக்கு சென்றார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
 
படம் நன்றாக உள்ளது. பக்கவான
 டைம் பாஸ் மூவி. ஆக்ஷன் காட்சிகள் செம அதிரடி. அதிலும் வித்தியாச வித்தியாசமாக Cyborg களுடன் ஹீரோயின் போடும் சண்டை சிறப்பு. 
 
அதே போல் மோட்டார் பால் விளையாட்டு காட்சிகளும் செம சூப்பர்.
Iron City கிராஃபிக்ஸ்ஸில் நன்றாக உள்ளது. ஹீரோயின் கூட கிராபிக்ஸ் தான் ஆனால் அருமையாக டிசைன் செய்துள்ளார்கள் குறிப்பாக கண்கள்.
 
என்க்கு என்னமோ கடைசியில் தான் கொஞ்சம் ஸ்லோவா போன மாதிரி தெரிஞ்சது. அதுவும் லவ் போர்ஷன்கள் ஸ்பீட் பிரேக்கர்ஸ். ஆனால் அதுவும் கதைக்கு தேவையான ஒன்று தான். 
 
டைம் பாஸ் மூவி, கண்டிப்பாக ஒரு டைம் பார்க்கலாம். 
 
IMDb Rating : 7.3
தமிழ் டப் உள்ளது. 
OTT -ல் இருப்பது போல தெரியவில்லை . 
 
 
Director: Robert Rodriguez
Cast: : Rosa Salazar, Mahershala Ali, Christoph Waltz, Jennifer Connelly, Keean Johnson, Jackie Earle Haley, Eiza Gonzalez, Ed Skrein
Screenplay: James Cameron and Laeta Kalogridis and Robert Rodriguez, based on the graphic novel series “Gunnm” by Yukito Kishiro
Cinematography: Bill Pope
Music: Junkie XL
 
 
Watch Trailer: 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Zom 100: Bucket List of the Dead – Trailer UpdateZom 100: Bucket List of the Dead – Trailer Update

Zom 100: Bucket List of the Dead – புது ஜப்பான் ஜாம்பி பட டிரைலர் Netflix நிறுவனம் August 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜப்பானிய Zombie படத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது.  2018 ல் வெளிவந்த

Marco Polo – மார்க்கோ போலோ -2014- Season -1Marco Polo – மார்க்கோ போலோ -2014- Season -1

இது பிரபல வணிகர் மற்றும் பயணியான மார்க்கோ போலோவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை தொடராக எடுத்துள்ளார்கள். இது எந்த அளவு உண்மையான சம்பவம் என்று தெரியாது அதனால் இதை ஒரு கற்பனையான தொடராகவே எடுத்துக் கொள்ளலாம்.  தொடர் நடக்கும் காலகட்டம் 1200

Spring – 2014Spring – 2014

Spring Movie Review  Horror, SciFi & Romance கலந்த ஒரு வித்தியாசமான படம் பாக்கனும்னா இந்த படம் பாருங்க.  அமெரிக்காவிருந்து இத்தாலிக்கு செல்லும் இளைஞனுக்கும் அங்கு வசிக்கும் மர்மமான ஒரு பெண்ணுக்கும் இடையே வரும் காதல் பற்றிய படம். ஹீரோ