Get Out – 2017

Get Out Tamil Review 

இது ஒரு மர்மம் கலந்த ஹாரர் படம். 

ஆனால் எனக்கு என்னமோ இந்த படம் சைக்கலாஜிகல் திரில்லர் மாதிரி தான் தெரியுது. 

Get out movie review in tamil, get out movie tamil, get out movie telegram download , get out movie IMDb, like invitation, get out tamil download

படம் ஸ்லோ பர்னர் வகை. கடைசி 30 நிமிடங்கள் படம் ஸ்பீடு எடுக்கும் . அதற்கான பில்டப் தான் அதற்கு முந்தைய பகுதி படம். 

அதற்காக ஃபோர் அடிக்கும் அளவுக்கு இல்லை. செமயான engaging Screenplay, வித்தியாசமான கேரக்டர்ஸ் மற்றும் ஹாரர் காட்சிகள் வைத்து நன்றாக படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

படத்தின் கதையை பார்க்கலாம். 

முதல் காட்சியில் ஒருத்தனை முகமூடி போட்ட ஒருத்தன் அடிச்சு டிக்கி உள்ள போட்டு கடத்திட்டு போறான்.

இன்னொரு பக்கம் கருப்பினத்தை சேர்ந்த ஹீரோ , வெள்ளையினத்தை சேர்ந்த ஹீரோயின். இருவரும் ஒரு வார இறுதியில் ஹீரோயினின் வீட்டுக்கு போகிறார்கள். 

ஹீரோவோடு ஒரே ப்ரெண்ட் போகாதடா அவனுக உன்னை செக்ஸ் அடிமை ஆக்கிறுவாங்க என்று கூறி பயமுறுத்துகிறான்.

ஆரம்பத்தில் நன்றாக போகும் டிரிப் நேரம் ஆக ஆக ஹீரோவுக்கு  ரொம்பவே uncomfortable ஆகுது.

கடைசியில் ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்பது செம ட்விஸ்ட் மற்றும் க்ளைமாக்ஸ். 

ஹாரர் படத்துக்கு ஏற்ற செட் அப். பக்கத்துல வீடே இல்லாத ஒரு பெரிய பங்களா.  ஓனர் குடும்பம் எல்லாரும் வெள்ளையினம் ஆனால் 2 வேலைக்காரர்கள் மற்றும் கறுப்பினம். அந்த 2 பேரோடு நடவடிக்கைகள் அசாதாரணமாக இருக்கிறது.

ஹுரோயின் அப்பா பெரிய நியூரோ சர்ஜன் மற்றும் அவ அம்மா சைக்கியாட்ரிஸ் மற்றும் ஹிப்னாடிசம் செய்வதில் வல்லவர். 

இது போக ஒரு பெரிய பாராட்டி நடக்கிறது அதில் அவர்களுடைய பணக்கார சொந்தக்காரர்கள் அனைவரும் வருகிறார்கள்.  அனைவரும் ஹீரோவை வித்தியாசமாக குறு குறு பார்க்கிறார்கள் ‌‌. முன்னாடி விட்டு பின்னாடி ஏதோ பேசுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஹீரோ கடுப்பில் போகலாம் என கிளம்புகிறான். ஆனால் ஹீரோயின் குடும்பத்தால் தடுத்து நிறுத்தப்படுகிறார் . 

ஏன் எல்லாரும் இப்படி நடந்து கொண்டார்கள் ? ஏன் ஹீரோவை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள் ? அவர்கள் நோக்கம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

முன்னாடியே சொன்ன மாதிரி ஸ்லோ பர்னர் வகையான படம். பார்க்க பொறுமை வேண்டும். ஆனா வொர்த்த்து 🙌. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஆபாசங்கள் காட்சிகள் இல்லை.ஆனால் வன்முறை மற்றும் பயமுறுத்துவது போன்ற காட்சிகள் அதிகம். 

IMDb Rating : 7.7

Award: Academy Award for Best Original Screenplay (2018) . 

படத்தை பாருங்கள் உங்களுக்கே தெரியும் ஏன் அவார்டு கொடுத்தார்கள் என்று. 

OTT ல் இருப்பது போல் தெரியவில்லை. 

DM for download link. 

Director: Jordan Peele

Cast: Daniel Kaluuya, Allison Williams, Bradley Whitford, Catherine Keener, Caleb Landry Jones, LilRel Howery

Home Release Date: 2017-05-23

Screenplay: Jordan Peele

Cinematography: Toby Oliver

Music: Michael Abels

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மான்டேஜ் (Montage) – 2013மான்டேஜ் (Montage) – 2013

மான்டேஜ் (Montage) – 2013 கொரிய சட்டத்தின்படி 15 வருடங்களுக்குள் ஒரு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாமல் போனால், அந்த வழக்கு இழுத்து மூடப்படும். குழந்தை கடத்தப்பட்ட வழக்கு ஒன்று இதே போல்  குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால்

The Blackening – 2022The Blackening – 2022

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூல் அள்ளிய ஹாரர் காமெடி நையாண்டி (Satire) படம். ⭐⭐⭐.75/5 Tamil Dub ❌, OTT ❌ நண்பர்கள் குழு, காட்டில் நடுவே வீடு, கொலைகாரன் என வழக்கமான டெம்ப்ளேட் ஆனா படம் ஜாலியா போகுது நல்ல

Attack The Block – 2011Attack The Block – 2011

இந்த படம் 2011 – ல் பிரிட்டனில் இருந்து வந்த காமெடி, ஹாரர் கலந்த ஒரு ஏலியன் படம்.  நானும் இருக்குற எல்லா ஏலியன் படத்தையும் வளைச்சு வளைச்சு பார்த்து விட்டேன் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான ஏலியன் கதைக்களம் கொண்டது.