Attack The Block – 2011

இந்த படம் 2011 – ல் பிரிட்டனில் இருந்து வந்த காமெடி, ஹாரர் கலந்த ஒரு ஏலியன் படம். 

நானும் இருக்குற எல்லா ஏலியன் படத்தையும் வளைச்சு வளைச்சு பார்த்து விட்டேன் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான ஏலியன் கதைக்களம் கொண்டது. 
படம் நடப்பது லண்டனில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் பிளாககில். 
படத்தின் கதைப்படி ஒரு டீன் ஏஜ் பசங்க கேங் இருக்காங்க. அதுல ஒருத்தர் தான் ஹீரோ. எல்லா சேட்டைகளும் பண்றானுக .. டோப் அடிக்கிறது, அதை விக்கிறது, சின்ன சின்ன கொள்ளைகள் என போகிறது வாழ்க்கை. 
ஒரு நாள் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று ஒரு காரின் கூரையை பிச்சுக்கிட்டு விழுது. அது என்னன்னு பார்க்க போன ஹீரோ மூஞ்சில பூரான் விட்டுட்டு ஒடி போகுது ஒரு குரங்கு போன்ற உருவம். 
ஹீரோவுக்கு தன்மானம் இடிக்க அதை விரட்டி போய் கொன்று தூக்கி வருகிறான். 
அது வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது. இதை வித்தா காசு கிடைக்கும் என்று பத்திரமாக அப்பார்ட்மெண்ட்டில் போதை மருந்துகள் பதுக்கும் இடத்தில் அந்த செத்த மிருகத்தை வைத்து விட்டு வருகிறார்கள். 
கொஞ்சம் நேரத்தில் நிறைய ஏலியன்கள் வானத்தில் இருந்து. விழுகிறது. ஆனால் முதலில் வந்த ஏலியன் போல சிறிதாக இல்லாமல் நல்லா கொரில்லா குரங்கு போல கரு கரு என்று பெரிதாக உள்ளது. 
அனைத்து ஏலியன்ஸ்களும் அப்பார்ட்மெண்ட் பிளாக்கை சுத்தி சுத்தி தாக்குகின்றன. 
அபார்ட்மெண்ட்ல் பல சட்டவிரோத காரியங்கள் நடப்பதால் போலீஸை கூப்பிடாமல் தாங்களே இந்த ஏலியன்ஸ்களை அழிக்க முடிவு செய்கிறார்கள். 
.
எவ்வாறு அப்பார்ட்மெண்ட்டை பாதுகாத்தனர் என்பதை படத்தில் பாருங்கள். 
ஏலியன் உருவமைப்புக்கு ரொம்ப மெனக்கெடாமல் நல்ல பெரிய கருங்குரங்கு மாதிரி டிசைன் பண்ணிருக்காங்க. வாயில் பல்லுல மட்டும் நல்ல பளிச்சுன்னு லைட்ட போட்டு விட்டு இருக்காங்க. 
படம் மெதுவாக ஆரம்பிச்சாலும் போக போக ஸ்பீட் எடுக்கிறது. கொஞ்சம் காமெடி இருக்கு.
வித்தியாசமான ஒரு ஏலியன் டைம் பாஸ் படம். ஹீரோயின் இருக்காங்க ஆன பெரிய அளவில் ரோல் இல்லை.‌
சில வன்முறை காட்சிகள் தவிர்த்து குடும்பத்துடன் பார்க்கலாம். 
கண்டிப்பாக பாருங்கள். நல்ல டைம் பாஸ் படம். 
IMDb Rating : 6.7 
Not available in OTT
DM for download link. 
Directed by: 
Joe Cornish
Written by:
Joe Cornish
Starring: 
John Boyega
Jodie Whittaker
Alex Esmail
Franz Drameh
Leeon Jones
Simon Howard
Luke Treadaway
Jumayn Hunter
Nick Frost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Bedevilled – 2010Bedevilled – 2010

இது ஒரு கொரியன் ஹாரர் திரில்லர்.  இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. IMDb 7.3 தமிழ் டப் இல்லை.  சிட்டியில் ஒரு வேலை பார்க்கும் இளம்பெண் தனிமையில் வசிக்கிறார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வலுக்கட்டாயமாக லீவில் அனுப்பப் படுகிறார்.  இவர்

The Crow – 1994The Crow – 1994

ஹீரோ மற்றும் அவரின் காதலியை கொன்றவர்களை ஹீரோ மறுபடியும் உயிர் பிழைத்து வந்து பழிவாங்கும் Fantasy கதை தான்‌ இந்த படம். IMDb  7.5 Tamil dub ❌ OTT ❌ IMDb user and critics rating ல எதுக்கு

Virus: 32Virus: 32

Shudder – ல் வெளிவந்துள்ள ஒரு Spanish ஹாரர் ஜாம்பி சர்வைவல் படம் இது.  IMDb 5.5 Tamil dub ❌ இதுல வர்ற ஜாம்பிகள் ஒரு அட்டாக் பணணுச்சுனா மறுபடியும் அட்டாக் பண்ண 32 நொடிகள் எடுத்துக் கொள்ளும்.  ஒரு