Kalaiyarasi – 1963

Kalaiyarasi – 1963 post thumbnail image

கலை அரசி – 1963

Drama, SciFi / Space, Comedy 

நடிகர்கள்: எம்ஜிஆர், பானுமதி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா

இசை: கே வி மகாதேவன்

இயக்குனர்: காசிலிங்கம்

கலை அரசி - 1963  Drama, SciFi / Space, Comedy   நடிகர்கள்: எம்ஜிஆர், பானுமதி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா  இசை: கே வி மகாதேவன்  இயக்குனர்: காசிலிங்கம்

காலைல எங்க அப்பா Sun Life ல இந்த படத்த பாத்துட்டு இருந்தாரு. இது விண்வெளி சம்மந்தப்பட்ட படம் பறக்கும் தட்டு எல்லாம் வரும் என்றார். 

இந்த படத்தை முன்னாடியே கேள்விப்பட்டு இருக்கிறேன்

முதன் முதலில் தமிழில்/ இந்தியாவில் வந்த ஏலியன்கள் மற்றும் விண்வெளி சார்ந்த படம் இது. 

இன்னிக்கு பார்த்து விடலாம் என்று உக்காந்து பார்த்து முடிச்சாச்சு.

கதை என்னனா..

பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் ஒரு கிரகம். 

 அவங்க கிரகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் கலைகளில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. 

அதனால் பூமிக்கு வந்து கலைகளில் சிறந்த ஒருவரை கடத்திட்டு போய் அவங்களை வச்சு கலைகளை வளர்க்க ப்ளான் போடுறானுக. 

இந்த ப்ளானை நடத்தி முடிக்க ஏலியனான நம்பியார் அவரோட  அஸிஸ்ட்டன்ட்டை கூட்டிட்டு பறக்கும் தட்டுல  பூலோகம் வர்றாரு. 

பூமில நம்ப எம்ஜிஆர் ஒரு விவசாயி. அந்த ஊரில் இருக்கும் கலைகளில் சிறந்து விளங்கும் பணக்கார பெண்ணான வாணி (பானுமதி) உடன் காதல். 

ஏலியன் நம்பியார் பானுமதியை கடத்திட்டு அவங்க கிரகத்துக்கு தூக்கிட்டு போய்டுறார்.

அப்புறம் என்ன எம்ஜிஆர் அந்த கிரகத்துக்கு போய் பறக்கும் தட்டு டிரைவிங் எல்லாம் கத்துக்கிட்டே தன்னுடைய காதலியை மீட்டாரா என்பது மீதிக்கதை. 

கதை நன்றாக இருந்தாலும் அதை நகர்த்திய விதம் சுமார் தான். 

ஆனால் கான்செப்டை யோசித்த விதம் , பறக்கும் தட்டு , அதன் உள்புறம், அது பறக்கும் போது காட்டப்படும் effects மற்றும் இசை அருமை.

இப்ப பார்ப்பதற்கு ரொம்பவே காமெடியாக சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் படம் வந்தது 1963 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

எம்ஜிஆர் அந்த கிரகத்தின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தடுமாறும் காட்சிகள் அருமையா எடுத்து இருப்பாங்க. 

இசையில் கேவி மகாதேவன் அவர்கள் கலக்கி இருப்பார். 

எம்ஜிஆர் இருந்து மசாலா இல்லாமல் எப்படி பூலோகத்தில் ரெண்டு சண்டை , பறக்கும் தட்டில் நம்பியார் கூட சண்டை மற்றும் வாள் சண்டை உள்ளது. 

வித்தியாசமான முயற்சி என்பதால் ஒரு தடவை பார்க்கலாம்.

A Space Odessy – 1968 ல தான் வந்தது.

1 thought on “Kalaiyarasi – 1963”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ex Machina – 2014Ex Machina – 2014

Ex Machina Tamil Review  ரொம்ப நாளா வாட்ச் லிஸ்ட்ல இருந்த படம்.  IMDb 7.7 Tamil dub ❌ Available in primevideo பெண் உருவில் உள்ள அட்வான்ஸ்டு ரோபாட்டை டெஸ்ட் பண்ண முயற்சி செய்யும் இரண்டு பேரை அந்த

The Truman Show – 1998The Truman Show – 1998

ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். IMDb 8.1 Tamil dub ✅ பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம்.  பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம்

Dune – 2021Dune – 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்.  இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும்.  IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை.  இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம்.