Train To Busan – 2 – Peninsula (2020)

Train To Busan – 2 – Peninsula (2020) Korean Movie Review In Tamil 

இது 2016 -ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த Train to Busan என்ற ஜாம்பி திரைப்படத்தின் இரண்டாம் பாகம். 

முதல் பாகம் பெற்ற வெற்றியின் காரணமாக பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்தது.

ஆனால் முதல் பாகம் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் ஒரு முறை பார்க்கலாம். 

Train to B‌usan 2 Peninsula movie review in tamil, Peninsula full movie, where to watch train to Busan 2 Peninsula cast, ‌korean movies 2020, zombie

கப்பல் படை வீரனான ஹீரோ Jung Seok தன்‌ தங்கை , அவள் கணவன் மற்றும் குழந்தையுடன் ஜாம்பிகளால் சூழப்பட்ட தீவில் இருந்து கப்பலில் தப்பிக்கிறான். 

கப்பலில் ஜாம்பி தாக்குதல் நடக்கிறது.‌அதனால் கப்பல் ஹாங்காங் திருப்பி விடப்படுகிறது. 

ஜாம்பி தாக்குதலில் தங்கை மற்றும் அவள் குழந்தையை இழந்து விடுகிறார்கள். தங்கை கணவனுடன் ஹாங்காங்கில் அகதியாக தஞ்சம் அடைகிறார்கள். 

அங்குள்ள ஒரு லோக்கல் கேங் இவர்கள் தப்பித்து வந்த தீவில் உள்ள ஒரு ட்ரக் முழுவதும் அமெரிக்கன் டாலர் உள்ளது என்றும் அதை கொண்டு வந்தால் பாதியை அவர்களுக்கே தருகிறோம் என்கிறார்கள். 

4 பேர் கொண்ட குழு ட்ரக்கை மீட்க கிளம்புகிறது. ட்ரக்கை ஜாம்பிகளிடம் இருந்து போராடி மீட்டு வரும் வழியில் அங்குள்ள ஒரு கொடூரமான கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்த தாக்குதலில் Jung மற்றும் அவன் தங்கை கணவனும் பிரிக்கின்றனர். Jung – அக்கா மற்றும் தங்கை கொண்ட குடும்பத்தால் காப்பாற்றப் பாடுகின்றார், இன்னொருவன் அந்த கூட்டத்தால் அடிமையாக பிடித்துச் செல்லப்படுகிறான். 

Jung – ஐ காப்பாற்றியவகள் தங்களின் மறைவிடத்திற்கு கூட்டி செல்கின்றனர். அங்கு இந்த சகோதரிகளின் அம்மா (Min) மற்றும் தாத்தாவை சந்திக்கின்றனர்.

Min – அந்த தீவை விட்டு வெளியே செல்ல காத்திருப்பதால் Jung – உடன் இணைந்து அந்த ட்ரக்கை கைப்பற்றி தப்பிக்க திட்டமிடுகிறார்கள். 

எவ்வாறு கொடூர கும்பலிடம் இருந்து ட்ரக்கை மீட்டு ஜாம்பிகளிடம் இருந்து தப்பித்து தீவை விட்டு தப்பித்து சென்றார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 

முந்தைய பாகம் போல் இல்லாமல் மெதுவாக கதைக்களத்தை உருவாக்கி பின்பு படம் வேகம் எடுக்கிறது. 

ஹெய்ஸ்ட் மற்றும் ஜாம்பி கதைக்களத்தை கலந்து கொடுத்து உள்ளார் இயக்குனர். 

கார் சேசிங்குகள் அதிரடியாக உள்ளன. ஆனால் சேசிங் காட்சிகளை பார்க்கும் போது எனக்கு என்னமோ வீடியோ கேம் தான் அடிக்கடி ஞாபகம் வருகிறது. 

பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை அடுத்தது என்ன நடக்க போகிறது என்று நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது. 

முதல் பாகத்தை மறந்து விட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் நல்ல டைம் பாஸ் திரைப்படம். 

Director: Yeon Sang-ho

Cast: Gang Dong-won, Lee Jung-hyun, Lee Re, Kwon Hae-hyo, Kim Min-jae, Koo Kyo-hwan, Kim Do-yoon, Lee Ye-won, Jang So-yeon, Moon Woo-jin‌

1 thought on “Train To Busan – 2 – Peninsula (2020)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fear Street Part One : 1994 (2021)Fear Street Part One : 1994 (2021)

எழுத்தாளர் R.L.Stine எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாரரர்  திரைப்படம்.  இந்த திரைப்படம் அடுத்த அடுத்த வாரங்களில் மூன்று பாகங்களாக வெளிவருகிறது. July 2 முதல் பாகமான இந்த படம் வெளிவந்து உள்ளது. July 9 மற்றும் July 16 -ல்

ஃப்ரின்ஜ் (Fringe)ஃப்ரின்ஜ் (Fringe)

ஃப்ரின்ஜ் (Fringe) Series Review In Tamil   இது ஒரு ‌மர்மம் மற்றும் அறிவியல் கலந்த மிகப்பெரிய தொடர்…. மொத்தமாக 100 எபிசோட்கள் 5 சீசன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் நீளம்

எ கொயட் பிளேஸ் (A quiet place)எ கொயட் பிளேஸ் (A quiet place)

எ கொயட் பிளேஸ் (A quiet place) சமீபத்தில் பார்த்த அருமையான திகில் திரைப்படம்.  நாம் கொஞ்சம் சத்தமாக பேசினாலோ அல்லது வேறு ஏதேனும் சத்தம் கேட்டாலும் ஏலியன் போன்ற மிருகம் வந்து கொடுரமாக கொல்கிறது. எதிர்பாராத விதமாக மகன் மிருகத்தின்