Love and monsters – லவ் அண்ட் மான்ஸ்டர்ஸ் – 2020

எனக்கு மான்ஸ்டர் திரைப்படங்கள் மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படம் பற்றிய குறிப்பில் சர்வைவல் வகையான மான்ஸ்டர் திரைப்படம் என்பதால் மேலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. 

Love and monsters movie review in tamil, love and monsters 2020, love and monsters Netflix,Love and monsters cast, Netflix movie

உலகம் அழிந்து 7 வருடங்கள் கழித்து நடப்பது போன்ற கதை. பூமியின் மீது மோத வரும் விண்கற்களை அழிக்க மனிதர்கள் அனுப்பிய ஏவுகணைகள் மீண்டும் பூமியில் விழுந்து அதில் ஏற்பட்ட பிரளயம் காரணமாக விலங்குகள் அனைத்தும் மெகா சைஸில் வளர்ந்து மனிதர்களை சாப்பிட்டு காலி பண்ணுகிறது.  

தப்பிப் பிழைத்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே பூமிக்கடியில் இருக்கும் மறைவிடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

ஒரு காலனியில் இருக்கிறான் ஹீரோ ஜோயல். காலனியில் அனைவரும் குடும்பம் , லவ்வர் என இருக்க இவன் மட்டும் தனிமையில் இருக்கிறான். சமையல் வேலை செய்கிறான்… இவனுக்கு மிருகங்கள் என்றால் பயம்… எதாவது மிருகத்தை பார்த்தால் சிலை மாதிரி உறைந்து விடுகிறான். வாழ்க்கையில் பிடிப்பு ஏதுமின்றி வசித்து வருகிறான். 

இந்நிலையில் தன்னுடைய பழைய காதலி(7 வருடங்கள் முன்பு ) இன்னொரு காலனியில் இருப்பதை ஏதாச்சயாக கண்டுபிடித்து அவளுடன் பேச ஆரம்பிக்கிறான். 

ஒரு கட்டத்தில் தனியாக இருந்து சாவதற்கு பதிலாக ரிஸ்க் எடுத்து காதலி இருக்கும் காலனிக்கு செல்லலாம் என கிளம்பி விடுகிறான். 

சண்டையிடும் திறமை எதுவும் இல்லாமல் பயந்த சுபாவம் கொண்ட ஹீரோ பெரிய பெரிய மிருகங்களை சமாளித்து 85 மைல்கள் தொலைவில் உள்ள காலனிக்கு சென்று காதலியுடன் இணைந்தானா என்பது மீதிக்கதை. 

மான்ஸ்டர் மிருகங்கள் எல்லாம் அருமையாக கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.. தவளை, நத்தை, Tremors படத்தில் வருவது போன்ற மிருகம், நண்டு போன்றவை பெரிய சைசில் வருகின்றன.  

அவனுடய சைட் கிக்காக வரும் நாய் சிறப்பான பர்ப்பார்மன்ஸ் … சர்வைவர்களாக வரும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் லைட்டாக Zombieland படத்தை ஞாபகப்படுத்துகிறது. படம் ஹீரோவை சுற்றியே நகர்கிறது. அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். 

கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். 

IMDb Rating : 7.0/10 

Directed by: Michael Matthews

Written by: Brian Dufdield and Matthew Robinson, Cast: Dylan O’Brien, Jessica Henwick, Michael Rooker, Ariana Greenblatt, Te Kohe Tuhaka, Dan Ewing, Donnie Baxter, Ellen Hollman, Damien Garvey, Tandi Wright, Amali Golden, Tasneem Roc, Miriama Smith, and Te Kohe Tuhaka.

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்

Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்      ஏலியன் படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்று.    கிராபிக்ஸ் , செட்டிங்கள் என கலக்கி இருப்பார்கள்.        பெரும்பாலான படங்கள் வழ

The Invisible Man – 2020The Invisible Man – 2020

தரமான Sci Fi , Horror படம். கொடுமைப்படுத்தும் ஒரு விஞ்ஞானியான கணவரிடம் இருந்து தப்பித்து வருகிறார் ஹீரோயின்.  IMDb 7.1 Tamil dub ❌ OTT ❌ கணவன் தற்கொலை செய்து இறந்து விடுகிறான். செத்தாலும் விட மாட்டேன் என

Lone Survivor – லோன் சர்வைவர் – 2013Lone Survivor – லோன் சர்வைவர் – 2013

உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இராணுவ ஆக்ஷன் திரைப்படம்.  இராணுவம் பற்றிய திரைப்படம் என்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்க ராணுவத்தில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள் டைட்டிலோடு காட்டப்பட்டுகிறது. 4 பேர் கொண்ட ஒரு சின்ன படைவீரர்கள் குழு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிக்குள் செல்கிறது.