The Truman Show – 1998

ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

IMDb 8.1
Tamil dub ✅
பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம். 
பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம் கேமரா வைத்து அங்கே அவர்கள் பேசுவதை தேவைக்கு ஏற்ப வெட்டியும் ஒட்டியும் நமக்கு ஒரு சுவாரஸ்யமான நாடகமாக காட்டுவதைபோல, ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கி அதில் எண்ணற்ற நடிகர்களை களமிறக்கி 24 மணிநேரமும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை உலகுக்கு படம் போட்டு காட்டுவது தான் இந்த ட்ரூமன் ஷோ.
அதாவது அந்த செயற்கை நகரத்தில் ட்ரூமனை தவிர அவனை சுற்றி வாழ்பவர்வகள் அனைவருமே நடிகர்கள், அவன் தாய், தந்தை, மனைவி உட்பட. 
அவன் பிறந்தது முதல் தற்போது முப்பது வயதாகும் வரை ஒவ்வொரு நாளும் அவனின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பு செய்து பணம் பார்க்கிறது அந்த தொலைக்காட்சி. 
ஆனால் இந்த விஷயம் ட்ரூமனுக்கு எப்போது எப்படி தெரிகிறது, தெரிந்த பின்பு என்ன செய்தான் என்பது தான் கதை. 
அமேசான் ப்ரைமில் இருக்கிறது
படம் நல்லா இருந்தது. பல இடங்களில் Jim Carey நடிப்பு நமக்கு அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்த Show ஐ நடத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியாது. இதுவே இயக்குனரின் வெற்றி எனலாம். 
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம். 
Director: Peter Weir
Cast: Jim Carrey, Laura Linney, Ed Harris, Noah Emmerich, Natascha McElhone, Holland Taylor, Ted Raymond
Screenplay: Andrew Niccol
Cinematography: Peter Biziou
Music: Burkhart Dallwitz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Primal Fear – 1996Primal Fear – 1996

ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான்.  IMDb 7.7 Tamil dub ❌ OTT ❌ போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான

Silver Linings Playbook – 2012Silver Linings Playbook – 2012

இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம்.  IMDb 7.7  தமிழ் டப் இல்லை எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத Genre. இருந்தாலும் ட்விட்டர் நண்பர் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை கண்டிப்பாக  போஸ்ட் போடணும் என் று கூறிவிட்டார்.  அதனால் தான் இந்த

Nomadland – 2020Nomadland – 2020

3 Oscar வாங்கிய படம். பக்கா அவார்ட் மெட்டீரியல். அதனால பரபரப்பான படங்கள் தான் பார்ப்பேன் என்பவர்கள் தவிர்க்கவும்.  வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஒரு பெண் நவீன நாடோடி வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார். அவருடைய நாடோடி  வாழ்க்கையின் ஒரு பகுதியை