Series Recommendations – My Personal Favorites-Part 3

 The Handmaid’s Tales – 2017

47 Episodes 

இது ஒரு Sci Fi Drama தொடர். 

எதிர்காலத்தில் உலகம் அழிந்த பின்பு நடக்கும் கதை. 

அடிப்படை கிறித்தவ அமைப்பு நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் கருவுறும் திறமையை இழந்து விடுகிறார்கள். 

கர்ப்பமடையும் திறன் உள்ள பெண்களை அவர்களது குடும்பத்தில் இருந்து பிரித்து Hand Maid ஆக்கி விடுகிறார்கள். 

இந்த Hand Maid கள் குழந்தை இல்லாமல் இருக்கும் பெரிய அதிகாரிகளின் வீட்டில் தங்கி குழந்தை பெற்று தந்து விட்டு அடுத்த வீட்டிற்கு செல்ல வேண்டும். 

இவ்வாறு மாட்டிக்கொண்ட ஒரு Hand maid ன் வாழ்க்கை தான் இந்த தொடர். 

தொடர் செம ஸ்லோவா இருக்கும், நடிப்பு , திரைக்கதை எல்லாம் சூப்பரா இருக்கும். 

ஒரு வித்தியாசமான தொடர் இது.

Ozark – 2017

44 Episodes 

இது ஒரு க்ரைம் தொடர். 

நிதி நிறுவனம் நடத்தும் ஹீரோ ஒரு போதைப் பொருள் மாபியாவுடன் வேலை செய்கிறான். அவர்களுது பணத்தை வெள்ளையாக மாற்றுவது இவனது நிறுவனத்தின் வேலை.

ஒரு பிரச்சினை காரணமாக 8மில்லியன் டாலர்களை 6 மாதத்தில் மாற்ற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறது மாபியா. 

அதனை மாற்ற Ozark எனும் ஊருக்கு குடி வருகிறான். அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் தொடர். 

Love, Death & Robots – 1&2 Seasons – 2019

26 Episodes

முதலில் இது பெரியவர்களுக்கான அனிமேஷன் சீரிஸ். உங்களுக்கு அனிமேஷன் படங்கள் பார்ப்பது பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். அடல்ட் கன்டென்டட் ரொம்பவே அதிகம். அதுவும் அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது

சீரிஸ் ஆக இருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் தனித்தனியான Short films. அதாவது மொத்தமா 24 குறும்படங்கள் எடுத்து அதை 2 சீசனாக வெளியிட்டு உள்ளனர். 

பலவகையான Genres – களில் குறும்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. 

Sci Fi – ல் ஆரம்பிக்கும் தொடர் ஹாரர், ஆக்ஷன், காமெடி, Mystery, History, ஏலியன்ஸ், ஓநாய் மனிதன் என எல்லாவற்றையும் தொட்டு செல்கிறது. 

வித்தியாசமான கதைகள் உள்ளது. சில படங்கள் அனிமேஷனா இல்லை உண்மையில் படமாக்கப்பட்டதா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு பக்காவான அனிமேஷன்

Netflix – ன் வித்தியாசமான முயற்சி… அருமை… கண்டிப்பாக பார்க்கலாம். 

 Se7en, Fight Club போன்ற அருமையான படங்களை இயக்கிய David Fincher இதில் ஒரு Executive Producer. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

2021 – ஒரு பார்வை2021 – ஒரு பார்வை

2021 ஒரு வழியா முடிகிறது. இந்த வருடமும் பெரும்பாலான பகுதியை கொரானா ஆக்கிரமித்து கொண்டது. ஆனால் 2020 ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை.  2020 ல் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தேன். நிறைய போஸ்ட்டுகள் போட்டேன் . ஆனால் பெரிதாக

Turning Point : 9/11 And The War On TerrorTurning Point : 9/11 And The War On Terror

Turning Point : 9/11 And The War On Terror tamil review  இது ஒரே மினி டாக்குமெண்டரி சீரிஸ் ‌‌ அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மற்றும் அதன் பின் விளைவுகளை பற்றிய டாக்குமெண்டரி.