Tatkal Booking in Mobile App – Tips

Tatkal Booking in Mobile App – Tips 

Before Booking: 

1. முதலில் IRCTC App update ஆகி லேட்டஸ்ட் வெர்ஷன்ல இருக்கானு பாருங்க (Login Problem வந்தா இதுவும் ஒரு ரீசன்) 

2. Login பண்ணதுக்கு அப்புறம் Bio Metric Authentication “ON” பண்ணுங்க. 

3. Master List ல Passenger details சேருங்கள் . 

4. IRCTC Wallet ல் தேவையான அளவு பணத்தை லோட் பண்ணி வைச்சுக்கோங்க. 

5. Logout – பண்ணிட்டு Finger Print வைச்சு லாகின் பண்ணி எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொள்ளுங்கள். 

During Ticket Booking: 

1. மொபைலை Do Not Disturb (DND) Mode ல் போடுங்கள். 

2. 9.58 /10.58 மணிக்கு மேல் லாகின் செய்வது நல்லது. 

3. அதற்கு முன்னாடி லாகின் பண்ணுணா அங்க இங்க கிளிக் பண்ணி Session Expire ஆகாம பார்த்துக் கொள்ளுங்கள்

4. 9.59 / 10.59 மணிக்கு From, To , Date 

, Tatkal, Premium Tatkal தேர்ந்தெடுத்து Train List பேஜ்க்கு போய் வெயிட் பண்ணவும். 

5. App லயே டைம் காட்டும் சரியாக 10/11 மணி ஆனவுடன் SL/AC ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க. 

6. Passenger Details click பண்ணுனா கொஞ்ச நேரம் சுத்திட்டு நேரடியாக Master List காட்டும். 

7. அதில் செலக்ட் பண்ணிட்டு payment Choose பண்றப்ப Wallet Option ல IRCTC Wallet Choose பண்ணுங்க. 

8‌. Wallet க்கு தேவை OTP கொஞ்ச நொடிகளில் பெரும்பாலும் வந்துவிடும். 

9. DND Mode ON பண்ணி வச்சு இருந்தா OTP மெசேஜ்யை கவனமாக பார்க்க வேண்டும். 

General Tips : 

– Captcha வை கவனமாக கையா

ளவும்.  – Captcha வில் சின்ன சந்தேகம் வந்தாலும் அடுத்த Captcha வை Load பண்ணுங்க

– எல்லாமே சரியாக போனால் தான் உண்டு. ஒரு இடத்தில் Stuck ஆகி விட்டால் உடனே ஆஃப் குளோஸ் செய்வது மீண்டும் லாகின் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.‌ஒரு பயனும் இல்லை. 

– கிட்டத்தட்ட ரோபோ மாதிரி தான் செயல்பட வேண்டும் ‌. அதிக தொந்தரவு இல்லாத இடத்தில் அமர்ந்து முயற்சி செய்ய வேண்டும். 

– சிறு தவறு செய்தாலும் அதை சரி செய்ய நேரம் இருக்காது. 

– நேரடியாக Premium Tatkal போட்டு டிரை பண்ணலாம். ஆனா ஏதோ ஒரு காரணத்திற்காக தாமதமாகும் பட்சத்தில் ரேட் எகிறி விடும். 

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தால் ஒருவர் Tatkal , இன்னொருத்தர் Premium Tatkal டிரை பண்ணலாம். 

ஒருத்தர் Wifi இன்னொருத்தர் Mobile Data விலும் முயற்சி செய்வது நல்லது ‌. 

வேறு வேறு இடத்தில் இருந்து கொண்டு டிரை பணணா இது ஒர்க் ஆவாது. கம்யூனிகேஷன்லயே பாதி நேரம் போய் விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Financial Crimes – ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?Financial Crimes – ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?

கி.பி. 193 மார்ச் 23  ஆம் தேதி உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை பயன்படுத்தி அப்போதைய அரசரான Pertinax என்பவரை கொலை செய்து விட்டு  ரோமப் பேரரசையே ஏலம் விட்டார்கள் அரசரின் நம்பிக்கையை பெற்ற முதன்மை காவலர்கள் Praetorian Guard (a

WiFi Password – விழிப்புணர்வுWiFi Password – விழிப்புணர்வு

#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல

Gcam (Google Camera) – IntroductionGcam (Google Camera) – Introduction

Gcam (Google Camera) – ஒரு அறிமுகம்  நேத்து gcam & Stock Cam side by side ஒரு போட்டோ போட்டு இருந்தேன்.‌அத பாத்துட்டு நெறய பேர் APK லிங்க் கேட்டாங்க . அதுனால அது பத்தி தெளிவா கொஞ்சம்