Sweet Tooth – Season 2 Review

8 Episodes
Tamil ❌
முதல் சீசன் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் சீசன் ரிவ்யூ லிங்க் கீழே உள்ளது.
இந்த சீசனை பொறுத்த வரைக்கும் நிறைய எமோஷனல் காட்சிகள். வித விதமான விலங்குகளின் சாயலில் இருக்கும் Hybrid குழந்தைகளை கெட்டவர்களிடம் காப்பாற்றுவதை சுற்றி நகர்கிறது.
தொடரின் முக்கிய Hybrid குழந்தையான Gus , Last Men குழுவிடம் மாட்டிக்கொண்டு மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சிறையில் மாட்டிக் கொள்கிறான்.
அந்த குழந்தைகளின் வளர்ப்பு அம்மா, Jepperd மற்றும் Bear ஆகிய மூவரும் இணைந்து பலம் பொருந்திய Last Men ஆக்கிரமித்து உள்ள Zoo வில் இருந்து குழந்தைகளை மீட்பது பற்றிய சீசன் இது..
இன்னொரு டிராக்கில் டாக்டர் இந்த குழந்தைகளை சோதனை எலியாக மாற்றி தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார்.
இந்த சீசனில் Gus பிறப்பு பற்றிய உண்மைகள், அவனுடைய அம்மாவை பற்றிய தகவல்கள் தெரிய வருகிறது.
சில பேர் இறந்து விடுகிறார்கள், சில புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த சீசன் ரொம்ப பரபரப்பாக இல்லை என்றாலும் நம்மை பார்க்க வைத்து விடுகிறார்கள்.
விலங்குகள் போன்று வரும் குழந்தைகள் ரொம்பவே க்யூட்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
குழந்தைகளோடு பார்க்கலாமா ?
இந்த சீரிஸ் ரேட்டிங் 16+ வயது. உடலுறவு காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் வன்முறை காட்சிகள், கொஞ்சம் கொடூரமான காட்சிகள் உள்ளது.
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.