Gcam (Google Camera) – Introduction

Gcam (Google Camera) – ஒரு அறிமுகம் 

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

நேத்து gcam & Stock Cam side by side ஒரு போட்டோ போட்டு இருந்தேன்.‌அத பாத்துட்டு நெறய பேர் APK லிங்க் கேட்டாங்க . அதுனால அது பத்தி தெளிவா கொஞ்சம் சொல்லிட்டா நல்லதுனு தோனுச்சு அதுக்கு தான் இந்த த்ரெட்.

Warning : 

🔴 Only For Advanced Users 🔴

3rd Party apps உபயோகிக்கும் போது நிறைய ரிஸ்க் இருக்கு.

அதுனால இத பத்தி தெரியாதவர்கள் இதை தவிர்ப்பது நல்லது

எனக்கு இத பத்தி கவலை இல்ல மொபைல்ல நல்ல போட்டோ எடுக்கனும் என்பவர்கள் தொடரலாம்

சேதாரம் ஏதாச்சும் ஆச்சுனா கம்பெனி பொறுப்பு இல்ல 

Google அவுங்களோட Pixel கேமரால யூஸ் பண்றது தான் Gcam.  

இது அதிகாரப்பூர்வமாக வேற மொபைல்களுக்கு கொடுக்கப்படவில்லை. 

ஆனா சில டெவலப்பர்கள் அந்த Source Code ஐ எடுத்து மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் வேலை செய்யுமாறு மாற்றி இருக்கிறார்கள் ‌. 

இத பத்தி பாக்குறதுக்கு முன்னாடி எப்படி இந்த கேமரா ஆஃப் யூஸ் பண்ணா நல்லா தரமான போட்டோ எடுக்க முடியுது என்பதை சிம்பிளா பாக்கலாம். 

நல்ல போட்டோ எடுக்க 3 விஷயங்கள் அவசியம். 

1. Lens 

2. Image Sensor

3. Image Processing

Lens & Image Sensor – அது மொபைல்ல வர்றது தான் அத நம்ம ஒன்னும் பண்ண முடியாது.

ஆனா போட்டோ எடுத்த பின்னாடி அந்த போட்டோவை நம்ம பார்வைக்கு கொண்டு வர்றதுக்கு சில டெக்னிக் பயன்படுத்துவாங்க. அதுல Google Algorithm King 👍

இதுபோக கேமரா & Sensor ஐ சிறப்பான முறையில் உபயோகித்து சிறந்த போட்டோக்களை எடுக்க இந்த Gcam உதவுகிறது.

இத யூஸ் பண்ணா என்ன அட்வான்டேஜ்

– Photo Quality to the next level 

– HDR+, HDR + Enhanced 

– Portrait mode

– Top shot, Photosphere 

– night mode , Astrophotography

சிம்பிளா சொல்லனும்னா தரமான போட்டோக்கள் எடுக்கலாம். உங்க மொபைல்ல வர்ற கேமராவை விட இது பல மடங்கு தரமான போட்டோவை தரும். 

அதுலயும் குறிப்பாக Nighrmode & Portrait Mode ல எடுக்கும் படங்கள் வேற லெவல்ல இருக்கும்.  

கேமரா ஒரு சிக்கலான இயந்திரம். அதை எளிதாக உபயோகிக்கும் விதத்தில் உதவ இருப்பது தான் API . 

இந்த API ல் இரண்டு வெர்ஷன்கள் உள்ளன API 1 & 2. 

Camera API 2 -சப்போர்ட் இருந்தால் தான் இந்த Gcam வேலை செய்யும். 

இந்த போனுக்கு இந்த வெர்ஷன் என்று எல்லாம் கிடையாது. 

ஆன்ட்ராய்டு வெர்ஷனை பொறுத்து இது மாறுபடும். 

சில வெர்ஷன் உங்களுக்கு வேலை செய்யலாம் இல்ல திடீர்னு Hang ஆகி நிக்கலாம். இல்ல Stock Camera வை விட மோசமான போட்டோக்களை கூட இது கொடுக்கலாம்.

அதனால் உங்க மொபைலுக்கு எது சரியா வரும் என்பதை பார்த்து சரியாக உபயோகிக்க வேண்டும். 

கடைசியா நிறைய பேருக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை உபயோகிக்க வேண்டுமா என கேள்வி வரும். 

என்னோட பதில் ..‌ வொர்த்து 💥💥

எங்க டவுன்லோட் பண்ணலாம். இதுல நிறைய பேர் டெவலப் பண்ணி நிறைய Apk இருக்கு. இதுல பிரபலமானது மற்றும் கொஞ்சம் Bugs குறைவா , அடிக்கடி அப்டேட் ஆகறது இரண்டு

1. BSG ( MGC) 

2. Kaka 

இது ரெண்டுமே நான் ட்ரை பண்ணேன் . Kaka version நல்லா இருந்தது. ஆனா ரெண்டு மூனு தடவை கேமரா க்ராஷ் ஆகிடுச்சு. அதுனால BSG போட்டு வச்சிருக்கேன். இப்ப வரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை. 

Download: 

Google “celsoazevedo bsg” 

Results ல வர்ற முதல் லிங்கல போங்க. அங்கேயே நிறைய டெவலப்பர்கள் வெர்சன் இருக்கு. 

Try different versions & Enjoy 

More pictures

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

WiFi Password – விழிப்புணர்வுWiFi Password – விழிப்புணர்வு

#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல

Gold Investment IdeasGold Investment Ideas

Gold Investment Ideas பல்வேறு Gold Investment சாய்ஸ்கள்.. நிறைய பேர் DM ல Gold Investment பத்தி கேட்டீங்க.  1. வயசு 30 க்குள்ள இருந்தா Gold Investment பண்ணாம ஸ்டாக்ல போடுங்க.  2. SGB – பாதுகாப்பான ஒன்று.8

Mutual Fund & Investment Basics – 2Mutual Fund & Investment Basics – 2

Mutual Fund & Investment Basics – 2 Part – 1  https://www.tamilhollywoodreviews.com/2021/11/mutual-funds-basics.html இந்த முறை Direct Mutual Funds வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன்.  ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை