Greyhound – 2020

Greyhound Tamil Review 

Tom Hanks நடிப்பில் வெளிவந்த ஒரு War based movie. 

இரண்டாவது உலகப் போர் சமயத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். 
IMDb 7.0
Tamil டப் இல்லை ( சப் டைட்டில் உள்ளது) 
Greyhound Tom Hanks movie review in tamil, Tom Hanks best performance, Greyhound IMDb, Greyhound cast list, movie based on World war 2 , Germany Nazi

2 வது உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்க போர்க்கப்பல் தலைமையில் உணவுப் பொருட்கள், படை வீரர்கள் என மொத்தம் 37 கப்பல்கள் இங்கிலாந்து நோக்கி கிளம்புகிறது. 
இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக 3 போர்க்கப்பல்கள் செல்கின்றன. இந்த போர்க்கப்பல்கள் மற்றும் அனைத்து கப்பல்களிற்கும் தலைமை தாங்கும் கப்பல் தான் Greyhound என பெயரிடப்பட்ட கப்பல். 
Greyhound கப்பலின் கேப்டன் பொறுப்பில் Krause (Tom Hanks) உள்ளார் ‌‌.  மிகுந்த அனுபவசாலி என்றாலும் போர்க்காலத்தில் இதுவரை பணிபுரிந்தது இல்லை. 
இந்த பயணத்தில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போர் விமானங்கள் இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. 
அந்தப் பகுதியை கடக்க 3 நாட்கள் வரை ஆகும். 
இந்த மூன்று நாள் பயணத்தில் 6 ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல்கள் படை இந்த சரக்கு கப்பல்களை வளைத்து வளைத்து தாக்குகின்றன. இந்த தாக்குதலில் இருந்து அனுபவம் இல்லாத கேப்டன் எவ்வாறு கப்பல்களை வழிநடத்தினார் மற்றும்  தப்பினார்களா என்பதை பரபரப்பாக சொல்கிறது படம். 
படம் செம ஸ்பீடு. படம் முழுவதும் Tom Hanks வருகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிதாக ஒன்றும் வாய்ப்புகள் இல்லை. 
படத்தில் உபயோகித்த வார்த்தைகள் புரியாமல் கடற்படை சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் போக போக புரிய ஆரம்பிக்கிறது. 
Tom Hanks திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். படம் நன்றாக வேகமாக  நகருகிறது. நல்ல பரபரப்பான படம் . கண்டிப்பாக பாருங்கள். 
Apple TV ரிலீஸ் பண்ணிருக்கு‌ . 
DM For Telegram Download link. 
Director: Aaron Schneider
Cast: Tom Hanks, Elisabeth Shue, Stephen Graham, Matt Helm, Rob Morgan, Travis Quentin
Screenplay: Tom Hanks, based on “The Good Shepherd” by C.S. Forester
Cinematography: Shelly Johnson
Music: Blake Neely

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Warrior – வாரியர்-2011Warrior – வாரியர்-2011

சென்டிமென்ட் கலந்த பக்கா Action Entertainment. அப்பாவுக்கும் இரு மகன்களுக்கும் இடையே நடக்கும் ஒரு பாசபோராட்டம் பற்றிய கதை. தாயை கொடுமைப்படுத்துவது தாங்காமல், சிறு வயதிலேயே  தந்தையை பிரிந்து தாயுடன் சென்று விடுகிறான் Tommy (Tom Hardy). அந்த சமயத்தில் அண்ணன்

The Lincoln Lawyer – 2011The Lincoln Lawyer – 2011

 நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா திரில்லர்.  வக்கீலான ஹீரோவை  நல்லவன் போல நடிக்கும் அவரது க்ளையடண்ட்டான ஆன வில்லன் ஒரு கேஸில் எக்குத்தப்பாக மாட்டி விடுகிறான்.  அதிலிருந்து எப்படி ஹீரோ தப்பித்தான் என்பது விறுவிறுப்பான படம்.  Mick ஒரு சின்ன

Green Room – 2005Green Room – 2005

Green Room Tamil Review  A24 ல இருந்து வந்த இன்னொரு Horror Thriller  4 பேர் கொண்ட Music Band  ஒரு பாரில் நடக்கும் கொலையை தெரியாத்தனமாக பார்த்து விடுகிறார்கள் .  கொலைக்கு காரணமானவர்கள இவர்களை வெளியே விட்டால் பிரச்சினை