Alice In Borderland – Season 1 – Review

Alice In Borderland – Season 1 – Review post thumbnail image

Alice In Borderland – 2020
Season 1 , 8 Epsiodes
Genre: Sci Fi, Mystery, Thriller

Language: Japanese
⭐⭐⭐⭐.5/5

Tamil ❌
18+

ரொம்பவே லேட் 😅 ஆனா வொர்த்து…

செம Binge Watch மெட்டீரியல்.‌நேத்து காலைல ஆரம்பிச்சு நைட் தூக்குறதுக்கு முன்னாடி முடிச்சுட்டேன்.

ஒரு நாள் டோக்கியோவில் உள்ள மனிதர்கள் திடீரென மறைந்து விடுகிறார்கள். ஹீரோ & co மற்றும் சிலர் மட்டுமே உள்ள நிலையில் உயிர் வாழ வேண்டும் என்றால் அபாயகரமான விளையாட்டுகளை விளையாடி வெற்றி பெற வேண்டும்.

படத்தின் ஹீரோ வீடியோ கேம்களை விளையாடுவதில் வல்லவர். ஹீரோயின் மலையேறும் பயிற்சி பெற்றவர்.

பெரும்பாலும் ஒவ்வொரு எபிசோடும் ஒரு சேலஞ்சை கவர் பண்ணுகிறது. எல்லா சேலஞ்சையும் யோசிச்சு தரமா வச்சு இருக்கானுக. கடைசி வரைக்கும் என்ன ஆகும் பிழைப்பார்களா மாட்டார்களா என்ற கேள்விகளை கடைசி நொடி வரை கொண்டு போனது 🔥🔥

அதுவும் அந்த ஓநாய் ஆட்டுக்குட்டி கேம் எல்லாம் தரம்‌ 💥

நடுவில் அந்த பீச் எபிசோட் கொஞ்சம் ஸ்லோவா போனாலும் அடுத்து பிக்அப் பண்ணிடுறானுக.

இன்னொரு முக்கியமான விஷயம் கேரக்டர்களின் நிஜ உலக வாழ்க்கை மற்றும் அந்த எமோஷனல் கனெக்ட் இரண்டும் தேவையான அளவு இருக்கு.

இதெல்லாம் யாரு பண்றாங்க எதுக்கு பண்றாங்க என்பதை கடைசி வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணி இரண்டாவது சீசனுக்கு பக்கா செட்டிங்…

Squid Game பத்தி பேசும் போது எல்லாம் இந்த தொடரின் பெயர் அடிபடும். இரண்டும் விளையாட்டு/சேலஞ்சுகளை மையமாக வைத்து வந்த தொடர் என்பது தவிர வேற பெருசா ஒற்றுமை இல்லை.

இரண்டுமே அருமையான தொடர் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.

Highly Recommended 💥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Eye In The Sky – 2015Eye In The Sky – 2015

நம்ம சந்தில் இந்த படத்தை யாரோ ஒருவர் பரிந்துரை செய்து இருந்தார். அருமையான படம்.  IMDb 7.3 Tamil dub ❌ Available @ Amazonprimein மிலிட்டரி தாக்குதல் நடைபெறும் போது தெரியாத்தனமாக அந்த ஏரியாவிற்குள் வரும் சிறுமியால் ஏற்படும் குழப்பம்

The Bad Guys (Sheesh) – 2022The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.  ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.  IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்

Monster Hunter – 2021Monster Hunter – 2021

இது ஒரு Action , Fantasy Sci Fi படம்.  Monster படங்கள் என்னுடைய personal favorites . அதுனால பார்த்தேன்.  ஆக்ஷனுக்கு பேர் போன டோனி ஜா மற்றும் மிலா அக்கா சேர்ந்து நடிச்சு இருக்காங்க.  IMDb Rating கம்மி