Django Unchained

Django Unchained Tamil Review 

Quentin Tarantino படம் – 

என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். அசாதாரணமான காட்சியமைப்புகள், அதை அப்படியே கண்ணிமைக்காமல் ரசிக்கும்படியான பின்னணி இசை, சூழலுக்கேற்ப பாடல்கள், ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வசனங்கள் என அனைத்தையும்  ரசிக்கலாம். ஒரே ஒரு பிரச்சனை தான், துப்பாக்கி குண்டுகளும் ரத்தமும் திரையை தாண்டி நம் மீதும் பாயும் அளவிற்கு தெறிக்கும். ஒரு மனிதனின் உடலுக்குள் இவ்வளவு ரத்தமா என்று படைத்த இறைவனே ஆச்சரியபடுவான் போல. 

Django unchained movie review in tamil, django unchained tamil download, django unchained watch free online, Quinton Tarantino tamil dubbed movies

“12 Years A Slave” பேசிய அதே கறுப்பின அடிமைத்தனம் பற்றிய கதை தான் ஆனால் Tarantino அதையே நம்மூர் அசுரன் பாணியில் கொடுத்திருக்கிறார்.

திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் படங்களில் இதுவும் ஒன்று. இதுவரை நான்கு ஐந்துமுறை பாத்திருப்பேன் என நினைக்கிறேன். 

சரி படத்திற்குள் செல்வோம். 

Dr.Schultz (Christopher Waltz) ஒரு bounty hunter, அதாவது குற்றவாளிகளை உயிருடனோ இறந்தநிலையிலோ பிடித்து கொடுத்து அரசாங்கத்திடம் சன்மானம் பெறுவது தான் அவர் தொழில். ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க கறுப்பின அடிமையான Django (Jamie Foxx)ன் உதவி தேவைப்படுகிறது. Django-வை அடிமை சங்கிலியில் இருந்து அதிரடியாக மீட்டெடுத்து தன் தேவைக்கு பயன்படுத்த நினைக்கிறார். பதிலுக்கு காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடிக்க உதவும் படி கோரிக்கை வைக்கிறான் Django. 

அதற்கு உடன்படும் Dr. Schultz, அவனுடன் கைகோர்த்து வேட்டையை தொடங்குகிறார். Django-வை ஒரு அடிமையாக நடத்தாமல் தன் Partner ஆக சுதந்திரமாக நடத்துகிறார். இருவரும் சேர்ந்து பல குற்றவாளிகளை சூறையாடி கை நிறைய பணம் பார்க்கிறார்கள். கையில் தேவையான பணம் சேர்ந்ததும் Django-வின் மனைவியை தேடி புறப்படுகிறார்கள். 

Django-வின் மனைவி ஒரு பெரும் செல்வந்தரான  Calvin (Leonardo DiCaprio) – வின் பண்ணையில் அடிமையாக இருக்கிறாள் என்பதை அறிந்து அங்கே செல்கிறார்கள். Calvin-னிடம் இருந்து அவ்வளவு எளிதாக யாரையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது. பல சிக்கல்களுக்கு மத்தியில் Calvin-னிடம் இருந்து Django எப்படி தன் மனைவியை மீட்டான் என்பது தான் கதை. 

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் படம் ஓடினாலும் கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாது. Django வை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுப்பது, ஒரு ஊருக்குள் சென்று அந்த ஊரின் ஷெரிப்பை நடுவீதியில் கொன்றுவிட்டு, மார்ஷலிடம் அதற்காக பரிசு கேட்பது என படம் ஆரம்பம் முதலே அதிரடி தான். 

Christopher Waltz-க்கு இந்தபடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வங்கிக்கொடுத்தது. Tarantino இயக்கத்தில் இது அவருக்கு இரண்டாவது ஆஸ்கார். அந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிகர். அவருக்கு ஏன் விருது என்பதை இறுதி காட்சி ஒரு சான்று. 

Calvin-னின் மாளிகையில் இளம்பெண் ஒருத்தி ஒருபக்கம் பீத்தோவன் இசை வாசித்துக்கொண்டு இருக்க, Dr. Schultz-க்கு அந்த இனிய இசை கூட காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியது போல் இருக்கும். காரணம், சில நாட்களுக்கு முன் ஒரு அப்பாவி கருப்பரை, Calvin-னின் நாய்கள் கடித்து குதறிய அந்த காட்சி அவருக்கு கண்முன் வந்து அவரை எரிச்சலூட்டும். பீத்தோவன் இசையை நிறுத்த சொல்லிவிட்டு அடுத்து அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கை தான் அவரின் நடிப்பின் உச்சம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு கொடூரமான செல்வந்தனாக DiCaprio-வின் நடிப்பும் அருமை. அடிமையின் மூளையில் மூன்று புள்ளிகள் இருக்கும் என்று மண்டைஓட்டை உடைத்து விளக்கம் கொடுக்கும் அந்தக் காட்சியில் நம்மையும் கொஞ்சம் நடுங்க வைத்துவிடுவார். 

ஒரு தரமான ஆக்ஷன் படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக இதை பார்க்கலாம். 

IMDB Rating : 8.4

Available in Netflix  

Available in Amazon Prime

Warning : இரத்தம் தெரிக்கும் காட்சிகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மான்டேஜ் (Montage) – 2013மான்டேஜ் (Montage) – 2013

மான்டேஜ் (Montage) – 2013 கொரிய சட்டத்தின்படி 15 வருடங்களுக்குள் ஒரு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாமல் போனால், அந்த வழக்கு இழுத்து மூடப்படும். குழந்தை கடத்தப்பட்ட வழக்கு ஒன்று இதே போல்  குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால்

Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)

இது அமேசான் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம்.அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. இது ஹாரர் , திரில்லர் மற்றும் கொஞ்சம் அமானுஷ்யம் கலந்த திரைப்படம்.  படத்தின் நாயகன் நோலன் (Mamoudou Athie) பயங்கர கார் விபத்தில் சிக்கி மனைவியை இழந்தது மட்டும் அல்லாமல்