The Fabelmans – 2022

The Fabelmans Tamil Review 

வருஷத்துல பாக்குற முதல் படம் நல்லா இருக்கனும் என்று பெரிய தலை Spielberg படத்தை பார்த்தேன். 

சிறுவயதில் இருந்து சினிமா மேல் இருக்கும் தன்னுடைய காதலை (கதையை) படமாக எடுத்து இருக்கிறார். 

Slow but worth watching. 

The Fabelmans Tamil Review, The Fabelmans review, the Fabelmans movie review in tamil, Stephen Spielberg movie review in tamil, movies based on Cinema

The Fabelmans Tamil Review, The Fabelmans review, the Fabelmans movie review in tamil, Stephen Spielberg movie review in tamil, movies based on Cinema

இது Spielberg வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். 1950 களில் நடக்கும் கதை. 

கம்யூட்டர் இன்ஜினியரான அப்பா மற்றும் பியானிஸ்ட் ஆன அம்மாவின் மகன்‌ Sammy. 

அவனை முதல் முறையாக படத்திற்கு கூட்டி போகிறார்கள். படத்தில் வரும் ரயில் விபத்துக்கு காட்சியால் உந்தப்பட்டு தனது பொம்மை ரயிலை வைத்து விபத்து ஏற்படுத்தி அதை தனது தந்தையின் கேமராவில் படம் பிடிக்கிறான் . இதுதான் அவன் எடுத்த முதல் படம். 

இதன் பிறகு பல குட்டி படங்களை எடுக்கிறான். இதற்கு நடுவே தந்தையின் வேலை காரணமாக பல ஊர்களுக்கு பயணப்பட வேண்டி இருக்கிறது.  அதன் பின் குடும்பத்தில் வரும் சிக்கல்கள் .  இவை அனைத்தையும் தாண்டி எவ்வாறு தன்னுடைய சினிமா மீதான காதலை தொடர்கிறான் என்பதை சொல்லும் படம். 

படம் மெதுவாக செல்கிறது. குறும் படங்கள் மற்றும் அதை எடுத்த விதங்கள் அவ்வளவு அருமை. 

என்ன மாதிரியான Casting 👏 மற்றும் கதை சொல்லும் விதம்.‌ நாடி , நரம்பில் எல்லாம் சினிமா ஊறிப்போன ஒருவர் தனது கதையை படம் எடுத்தார் என்றால் சொல்லவா வேணும்.

Michelle Williams, Paul Dano மற்றும் இளைஞன் பாத்திரத்தில் வரும் Sammy என அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். 

ஆனா  நமக்கு அந்த Nostalgic Feel  வருவது சந்தேகம் தான். அமெரிக்க மக்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்று நினைக்கிறேன். 

சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Papilon – 2017Papilon – 2017

 ஒரு சர்வைவல் ட்ராமா படம்‌.  தனியாக தீவில் உள்ள ஒரு கொடூரமான ஜெயிலில் ஹீரோ எப்படி உயிரைக் காப்பாற்றி கொண்டு நண்பனின் உதவியுடன் தப்பிக்க முயற்சி செய்வதை பற்றிய படம். IMDb 7.2 Tamil dub ❌ Available @amazonprime பிரான்ஸ்ஸில்

The English – 2022 – Mini SeriesThe English – 2022 – Mini Series

1980 களில் வெஸ்டர்ன் செட்டப்பில் நடக்கும் ஒரு பழிவாங்கும் படலம் தான் இந்த சீரிஸ்.  பழிவாங்க வர்ற இங்கிலாந்து லேடி மற்றும் அவளுக்கு உதவும் உள்ளூர் பழங்குடி இளைஞனை சுற்றி நகரும் கதை.  IMDb 8.0 Episodes 6 OTT &

CODA (Children Of Deaf Adults) – 2021CODA (Children Of Deaf Adults) – 2021

Apple TV+ வெளியிட்ட ஒரு Feel Good + Musical படம்.    ஹீரோயின் குடும்பத்தில் அவளை தவிர வேற யாருக்கும் காது கேட்காது.    இவளை நம்பி தான் குடும்ப பிசினஸ் இருக்கும் நிலையில் அவளது Passion க்காக குடும்பத்தை