The English – 2022 – Mini Series

1980 களில் வெஸ்டர்ன் செட்டப்பில் நடக்கும் ஒரு பழிவாங்கும் படலம் தான் இந்த சீரிஸ். 

பழிவாங்க வர்ற இங்கிலாந்து லேடி மற்றும் அவளுக்கு உதவும் உள்ளூர் பழங்குடி இளைஞனை சுற்றி நகரும் கதை. 

IMDb 8.0

Episodes 6

OTT & Tamil dub ❌

The English mini series, the English mini series tamil review, western theme based series, western theme based series review in tamil, Western movies

Locke(Emily Blunt) லண்டனில் இருந்து தன் குழந்தையை கொன்றவனை பழி வாங்க அமெரிக்கா வருகிறார். 

ஒரு அசாதாரண சூழ்நிலையில் பழங்குடி இளைஞனை சந்திக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். 

பழிவாங்க இளைஞன் உதவ இருவரும் அந்த ரத்த பூமியில் செய்யும் பயணம் தான் இந்த தொடர். 

யார் அந்த பெண் ? எதுக்கு பழிவாங்க வருகிறாள் ? இந்த இளைஞன் யார் போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு எபிசோடாக தெளிவாகிறது. 

தொடர் சிறப்பாக ஆரம்பித்தாலும் நடுவில் மெதுவாக சென்று பின்பு வேகம் எடுக்கிறது. 

எனக்கு இந்த தொடரில் ரொம்ப ரொம்ப பிடித்த விஷயங்கள் குதிரைகள் வரும் காட்சிகள். அதுவும் மலை , சூரியன், புல்வெளி பகுதிகளில் லாங் ஷாட்டுகள் அருமை.  மொத்தமாகவே கேமரா ஒர்க் செமயா இருக்கிறது. 

நடிப்பை பொறுத்தவரை Emily Blunt செமயாக நடித்து இருக்கிறார். நண்பராக மற்றும் ஹீரோவாக வருபவரும் ரோலுக்கு நல்ல பொருத்தம்.

அடுத்த முக்கியமான விஷயம் லொக்கேஷன்கள் & வெஸ்டர்ன் செட் அப். அவ்வளவு அருமையாக இருந்தது ‌‌

உங்களுக்கு வெஸ்டர்ன் படங்களில் ஆர்வம் இருந்தால்  கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.

ஒரே மாதிரியான தொடர்கள் பார்த்து போர் அடித்து விட்டது கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். 

வொர்த்து 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release

Merantu – 2009Merantu – 2009

Raid, Raid 2 படத்தின் டைரக்டர் + ஹீரோ combo வின்  முதல் படம் தான் இது.  செம ஆக்சன் படத்துக்கு ஒரு சின்ன ஸ்டோரிலைன் மற்றும் கொஞ்சம் சென்டிமென்ட் சேர்த்து கொடுத்து இருக்கிறார்கள்.  IMDb 6.7  #Tamil dub ❌

Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015

Marvel தயாரித்து வெளியிட்டு உள்ள தொடர்.  சூப்பர் ஹீரோ கதைகளுக்கு பெயர் போன மார்வெல் தயாரித்த தொடர் என்பதால் சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும் என நினைத்தேன்.  தொடரின் ஆரம்பத்தில் கண் தெரியாத ஹீரோ ஆக்ரோசமாக சண்டையிடும் போதும் சூப்பர் ஹீரோ