“Oppenheimer” இந்த படம் நேற்று வந்த சில போஸ்டர்களால் சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
Oppenheimer – என்றால் என்ன?
J. Robert Oppenheimer என்பவரின் பெயரோட சுருக்கம் தான் “Oppenheimer”
யாரு இந்த J. Robert Oppenheimer ?
இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு Nuclear Physics Scientist .
இவருக்கு ஒரு அடைமொழி இருக்கு “Father of the atomic bomb”.(அணுகுண்டுகளின் தந்தை)
இவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி Christopher Nolan படமாக எடுக்கிறார்.
இரண்டாவது உலகப் போர் சமயத்தில் அணு ஆயுதங்கள் உருவாக்கம் மற்றும் அதை பயன்படுத்த முக்கியமான காரணம் இவர் தான்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முக்கிய அணுகுண்டு ஆராய்ச்சியான “Manhattan Project (1942 to 1946) ” மற்றும் முதல் அணுஆயுத சோதனையான “Trinity Test, July 16, 1945” இரண்டிலும் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.
இந்த அணுஆயுத சோதனைக்கு பிறகு இவர் பகவத்கீதையில் இருந்து ஒரு வரியை கூறியுள்ளார்
Explosion brought to mind words from the Bhagavad Gita: “Now I am become Death, the destroyer of worlds.”
இதற்கு பிறகு August 1945 ல் இந்த வகையான அணுகுண்டுகளை பயன்படுத்தி ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டது வரலாறு.
இந்த படத்திற்கு கிராபிக்ஸ் உபயோகிக்காமல் உண்மையான அணுஆயுதத்தை வெடிக்க வைத்து படம் பிடித்து இருக்கிறேன் என நோலன் சொன்னது பேச்சு பொருளாக ஆகியுள்ளது.
இந்த படம் பெரும்பாலும் கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
IMAX கேமிராக்கள் தனக்கென தனியான தொழில்நுட்பத்தை கொண்டது. இந்த வகையான கேமிராககளில் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டது இல்லை.
முதல் முறையாக அதையும் நடத்திக் காட்டி உள்ளார் .
மொத்தத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது .
இப்ப எனக்கு மனதில் வரும் சந்தேகம் என்னவென்றால்.. சாதரணமாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை மட்டும் படமாக்கி அவரை Genius ஆக காட்டி உள்ளாரா? இல்லை இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் அலச போகிறதா என தெரியவில்லை.
குறிப்பாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி சம்பவங்கள் பற்றிய ரெப்ரன்ஸ்கள் இடம் பெறுமா ?
என்னை பொறுத்தவரை அவரை ஓரு புத்திசாலியான ஆராய்ச்சியாளராக காட்டி படத்தை முடித்து விடுவார்கள் என நினைக்கிறேன் .. பொறுத்து இருந்து பார்ப்போம்…