The Killing Of A Sacred Deer – 2017

The Killing Of A Sacred Deer Tamil Review 

Dogtooth, The Lobster போன்ற விசித்திரமான படங்களை எடுக்கும் Yorgos Lanthimos இயக்கத்தில் வந்த இன்னொரு படம்‌. 

IMDb 7.0 

Tamil dub ❌

Sex & Violence ✅

Available @amazonprime

The Killing of a sacred deer movie review in tamil, Collin Farrell Weird movies, weird movies review in tamil, psychological thriller,

இந்த ஆள் படங்கள் எப்பவுமே வித்தியாசமாக இருக்கும் எதிர்பாராத ஏதாவது நடக்கும் படத்தில். நிறைய பேர் இவர் படத்தை இதை கலை படைப்பாக பார்க்கிறார்கள் 😉

ஹீரோ ஒரு  பிரபல இதய அறுவை சிகிச்சை  நிபுணர் . அன்பான மனைவி மற்றும் 12,16 வயதில் இரண்டு குழந்தைகள் என அழகான குடும்பம் .ஹீரோ ஒரு இளைஞனுடம் நட்பாக உள்ளார். அந்த இளைஞனின் தந்தை இவர் ஆப்பரேஷன் செய்த போது இறந்தவர். அவனுக்கு பரிசுகள்  கொடுக்கிறார், காசு கொடுத்து உதவுகிறார்.

ஆனால் நாட்கள் போக போக அந்த இளைஞன் கெட்டவனாக மாறி அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறான். 

நாளுக்கு நாள் குடைச்சல் அதிகமாகி ஒரு கட்டத்தில் ஹீரோ அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் ஒரு மிகப்பெரிய தியாகத்தை பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அது என்ன மாதிரியான தியாகம் ? அந்த இளைஞன் யார் ? ஏன் இவர்களை இந்த பாடு படுத்துகிறான் என்பதை படத்தில் பாருங்கள். 

படத்தில் நிறைய Weird ஆனா காட்சிகள் உள்ளன. குறிப்பாக ஹீரோ படுக்கை அறை காட்சிகள் , ஹீரோ தனது மகளை பற்றி பார்ட்டியில் பேசுவது என சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு எல்லாம் உச்சம் க்ளைமாக்ஸ் 😤 

Colin Farrell – இந்த டைரக்டருடன் இணையும் இரண்டாவது படம். Nicole Kidman அவருக்கு மனைவியாக நடிச்சு இருக்காங்க. இந்த டைரக்டர் படத்துல நடிக்க தனி திறமை மற்றும் தைரியம் வேண்டும் 😂

மெதுவாக போகும் படம  தான் . வித்தியாசமான படங்களை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக பார்க்கலாம். 

Director: Yorgos Lanthimos

Cast: Colin Farrell, Nicole Kidman, Barry Keoghan, Raffey Cassidy, Sunny Suljic, Alicia Silverstone, Bill Camp

Screenplay: Yorgos Lanthimos and Efthymis Filippou

Cinematography: Thimios Bakatakis

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

God’s Crooked Lines – 2022 – SpanishGod’s Crooked Lines – 2022 – Spanish

God’s Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review  பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body, The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம். அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா

Green Room – 2005Green Room – 2005

Green Room Tamil Review  A24 ல இருந்து வந்த இன்னொரு Horror Thriller  4 பேர் கொண்ட Music Band  ஒரு பாரில் நடக்கும் கொலையை தெரியாத்தனமாக பார்த்து விடுகிறார்கள் .  கொலைக்கு காரணமானவர்கள இவர்களை வெளியே விட்டால் பிரச்சினை

Those Who Wish Me Dead – 2021Those Who Wish Me Dead – 2021

Taylor Sheridan டைரக்ட் பண்ண படம். இவரோட Wind River படம் செம சூப்பரா இருக்கும். இது போக Angelina Jolie வேற இருந்தாங்க அதுனால பார்த்த படம்.  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  படத்தோட கதை என்னனா Angelina