Koorman – 2022 [Tamil]

ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படம். 

கூர்மன் என்றால் அடுத்தவரின் மனதில் நினைப்பதை  கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் என்று அர்த்தமாம். நம்ம Mentalist Patrick Jane  மாதிரி. 

படத்தின் ஹீரோ தான் கூர்மன். 

ஹீரோ ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. சில பிரச்சினைகளால் ஊருக்கு வெளிப்புறமாக ஒரு பண்ணை வீட்டில் ஒரு வேலைக்காரன் மற்றும் தான் வளர்க்கும் நாயுடன் வாழ்ந்து வருகிறார். 

போலீஸ் உயர் அதிகாரி நரேன் சில கடினமான கேஸ்களில் உண்மையை வரவழைக்க குற்றவாளிகளை இவனிடம் அனுப்புகிறார். 

ஒரு முறை குற்றவாளி ஒருவன் தப்பி ஓடி விட அதனால் வரும் பிரச்சினைகளுடன் ஹீரோ ஏன் இந்த நிலைக்கு ஆளானார் என சொல்கிறது படம். 

ஹீரோ நிறைவாக நடித்து உள்ளார். 

ஹீரோயினாக ஜனனி ஐயர் .ஹீரோவின் imaginary கதாபாத்திரத்தில் வருகிறார்.  ஒரு சில நேரங்களில் Maeve Wiley மாதிரி தெரிகிறார் 😏

வேலைக்காரனாக பால சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் நடித்து உள்ளார். சுப்பு என்கிற நாய் கதாபாத்திரமும் படம் முழுவதும் வருகிறது. 

பெண் வன்கொடுமை தான் முக்கியமான விஷயம் என்றாலும் அதை ரொம்பவே மேலோட்டமாக அணுகி உள்ளனர் ‌‌.  திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம். 

மற்றபடி கேமரா , பிண்ணனி இசை, லொக்கேஷன்கள் சிறப்பு ‌‌

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍 

இயக்கம் – பிரையன் பி ஜார்ஜ்

இசை – டோனி பிரிட்டோ

நடிப்பு – ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன்

நீளம் – 1 மணி நேரம் 56 நிமிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Prisoners – பிரிசனர்ஸ்- 2013Prisoners – பிரிசனர்ஸ்- 2013

X-Men ஹீரோ மற்றும் The Prestige படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த  Hugh Jackman நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Suspense Thriller. Thanks Giving நாளன்று Dover (Hugh Jackman) தன் குடும்பம் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் தன்

Attack The Block – 2011Attack The Block – 2011

இந்த படம் 2011 – ல் பிரிட்டனில் இருந்து வந்த காமெடி, ஹாரர் கலந்த ஒரு ஏலியன் படம்.  நானும் இருக்குற எல்லா ஏலியன் படத்தையும் வளைச்சு வளைச்சு பார்த்து விட்டேன் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான ஏலியன் கதைக்களம் கொண்டது. 

தி பிளாக் லிஸ்ட் ( The Blacklist )தி பிளாக் லிஸ்ட் ( The Blacklist )

தி பிளாக் லிஸ்ட் (The Blacklist)  இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். முதல் எபிசோட் ஆரம்பமே அதிரடியாக இருந்தது. அப்பொழுதே அனைத்து சீசன்களையும பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன். மொத்தம் 9 சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சுமாராக 20