The Lincoln Lawyer – 2011

 நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா திரில்லர். 

வக்கீலான ஹீரோவை  நல்லவன் போல நடிக்கும் அவரது க்ளையடண்ட்டான ஆன வில்லன் ஒரு கேஸில் எக்குத்தப்பாக மாட்டி விடுகிறான். 

அதிலிருந்து எப்படி ஹீரோ தப்பித்தான் என்பது விறுவிறுப்பான படம். 

The Lincoln Lawyer tamil movie review in Tamil., Matthew McConaughey attorney movie, movie like a time to kill

Mick ஒரு சின்ன வக்கீல். கிடைக்கிற சின்ன சின்ன கேஸ் எல்லாம் எடுத்து நெறய பேரை வெளியே கொண்டு வருகிறார் அல்லது தண்டனையை குறைக்கிறார். 

ஒரு நாள் பெண் ஒருத்தி தாக்கப்பட்ட வழக்கில் ஒரு பெரிய பணக்கார இளைஞனை காப்பாற்றும் கேஸ் இவனிடம் வருகிறது. 

ஹீரோவும் கேஸை எடுத்துக்கொண்டு வாதாட ஆரம்பிக்கிறான். ஆனால் போக போக அவன் க்ளையண்ட் சாதாரண ஆள் கிடையாது இதற்கு முன்னாள் பல குற்றங்களை செய்து நேக்காக தப்பித்து இருக்கிறான் என்று. 

ஆனால் ஒரு க்ளைண்ட் செய்த குற்றங்களை வெளியே சொல்வது சட்டப்படி குற்றமாகும்.(Client – Attorney privilege) . அதனால் இதை பற்றி வெளியே சொல்ல முடியாது. இந்த சூழ்நிலையில் எப்படி ஹீரோ சமாளித்தார்.‌ வில்லனுக்கு எப்படி தண்டனை வாங்கி தந்தாரா?  என்பதை படத்தில் பாருங்கள் ‌‌ .

படத்தில் நல்ல ஸ்கிரீன் ப்ளே.. போரடிக்காமல் நன்றாக நகர்கிறது படம. 

வக்கீலாக Matthew McConaughey  நடித்து இருக்கிறார். அருமையான நடிப்பு.. A Time to kill படத்தில் கடைசியாக இவரை வக்கீலாக பார்த்தது. 

நல்ல படம் நண்பர்களே , கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

No Exit – 2022No Exit – 2022

No Exit – 2022 Hulu Movie Tamil Review  நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .  புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட

Sicario – சிகாரியோ – 2015Sicario – சிகாரியோ – 2015

இது 2015 – ல் வந்த க்ரைம் த்ரில்லர்.  Sicario என்றால் மெக்சிகோவில் Hit Man என்று அர்த்தம் ‌‌  இந்த படத்தின் இயக்குனரின் மற்றொரு படமான Wind River செமயாக இருந்தது. அமெரிக்க , மெக்சிகோ எல்லைப்பகுதியில் நடக்கும் போதை