Mutual Fund & Investment Basics – 2

Mutual Fund & Investment Basics – 2

Part – 1

 https://www.tamilhollywoodreviews.com/2021/11/mutual-funds-basics.html

இந்த முறை Direct Mutual Funds வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன். 

Mutual fund basic in tamil, stock market introduction in tamil, buying stocks , mutual fund directly in tamil, Zerodha Coin App instructions in tamil

ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

எப்பவுமே உங்களுடைய Stocks and Mutual Fund unit களை DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் Stocks வாங்கனும்னா கண்டிப்பாக DEMAT account இருக்க வேண்டும். 

Mutual Fund ஆரம்பிக்க DEMAT அக்கௌன்ட் அவசியம் இல்லை ‌. 

ஆனால் நான் Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் MF களை அதனுடைய Coin App வழியாக வாங்குவதால் நேரடியாக DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.  

Clear Tax , PayTM போன்ற App கள் வழியாக MF வாங்க DEMAT account தேவை இல்லை. ஆனால் PAN நம்பர் எந்த வழியில் வாங்கினாலும் கட்டாயம். 

சரி இப்ப சில முக்கியமான வார்த்தைகளை  பார்க்கலாம். 

DEMAT account (Depositories) – இது Stocks சேர்த்து வைக்கிற பேங்க் மாதிரி.ஆனால் எல்லாமே Digital Format தான்.  இதில் Stocks/ MF டெபாசிட் பண்ணலாம் , Withdraw பண்ணலாம். ஆனால் நம்ம internet banking மாதிரி டைரக்டா இதனுடன் தொடர்பு கொள்ள முடியாது. நம்ம நாட்டுல தான் 2 Depository (NSDL & CDSL)  இருக்குனு நினைக்கிறேன். 

Depository Participants: 

இவங்க தான் நமக்கும் , Depositories க்கும் நடுவுல இருப்பாங்க.  DEMAT account ஆரம்பிக்க, அதை maintain பண்ண இவங்கள தான் அணுக வேண்டும். 

நிறைய பேங்குகள், கொஞ்சம் Stocks broker களை  DP எனலாம். 

Exchange: 

இது தான் நம்ம பங்குகளை வாங்க விற்க வழிவகை செய்யும் இடம். BSE, NSE என்று இரண்டு exchange கள் உள்ளன. 

Regulator : 

Exchange ல கொடுக்கல் வாங்கல் எல்லாம் சரியாக நடக்குதா.. எவனாவது ப்ராடு பண்றான ? ப்ராடு பண்ணாம தடுப்பதற்கான வழிமுறைகள் கொடுப்பது .. அதை சரியாக எல்லாரும் பின்பற்றுகிறார்களா என்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பது தான் Regulator. நம்ம ரெகுலேட்டர் SEBI . 

Stock Brokers : 

இவங்க மூலமா தான் நம்ம Stocks. வாங்க விற்க முடியும். Zerodha, Sharekhan , ICICI Direct அப்படினு எக்கச்சக்க brokers இருக்காங்க ‌‌ 

நான் ஒரே ஒரு DEMAT account Zerodha வில் வைத்து உள்ளேன். இப்ப எல்லாம் DEMAT account ஆரம்பிப்பது ரொம்பவே ஈஸி. Online மூலமாகவே எளிதில் ஆரம்பிக்கலாம். 

Next thread la Direct MF Zerodha Coin App வழியாக வாங்குவது எப்படினு பார்க்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மகனதிகாரம் – maganadhigaram -2மகனதிகாரம் – maganadhigaram -2

மகனதிகாரம் – maganadhigaram -2 மகனதிகாரம் – 1  தீபாவளிக்கு ஊர்ல இருந்து வர்றப்ப  எங்க அம்மா அவங்க செஞ்ச ரவா லட்டு மற்றும் முறுக்கு ரெண்டையும் நெறய பார்சல் பண்ணி கொடுத்து விட்டாங்க.  நானும் ரவா லட்ட ஃப்ரிட்ஜில் வைத்து

What is software , IT ?What is software , IT ?

உண்மையை சொல்ல போன சாப்ட்வேர் நம்ம வாழ்க்கையில கலந்து விட்டது.  உதாரணமாக UPI உபயோகித்து வண்டிக்கடைக்காருக்கு பணம் கொடுக்கறதுக்கு பின்னாடி கூட சாஃப்ட்வேர் இருக்கு.  நீங்க ஸ்கேன் பண்ணுறதுல இருந்து உங்க அக்கௌன்ட்ல பணத்த‌ எடுத்து அவரோட அக்கௌன்ட்ல பணம் போய்

Hyundai 10000 – Floating CraneHyundai 10000 – Floating Crane

நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் . கிரேன் ஒன்னு ஒரு பெரிய கப்பலை தூக்கிட்டு இருக்குற மாதிரி. அந்த கிரேன் கூட தண்ணில ஒரு மிதக்கும் அமைப்பில் இருந்த மாதிரி தெரிந்தது.பாக்கவே பயங்கர பிரம்மாண்டமாக இருந்தது .. சரி இது என்னன்னு