Dennis Villeneuve’s Sci Fi படங்கள்

Dune படம் பார்த்த பின்பு இவருடைய Sci Fi படங்களை பார்க்க வேண்டும் என ஆர்வம் எழுந்தது.  இந்த த்ரெட்டில் Dennis V ன்  இரண்டு Sci Fi படங்களை பற்றி பார்க்கலாம். 
Arrival படம் 2 மணி நேரம் ஓடும் படம். Blade Runner கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் படம். எனவே இந்த படங்களை பார்க்க பொறுமை வேண்டும். 
ஆனால் இரண்டு படங்களும் வொர்த்து 🔥🔥🔥🔥🔥
Arrival – 2016

Contact னு ஒரு படத்தை பத்தி கொஞ்சம் நாள் முன்னாடி எழுதி இருந்தேன். அதே மாதிரியான படம் தான் இது. 
திடீர்னு ஒரு நாள் 12 ஏலியன் விண்கலங்கள் பூமியில் தரை இறங்குகின்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் என மொத்தம் 12 இடங்களில் வந்து நிற்கும். ஏன் வந்தானுக எதுக்கு வந்தானுக என எந்த அறிவிப்பும் இருக்காது ‌.  சண்டைக்கு வந்தார்களா, சுற்றுலாவா என தெரியாமல் எல்லாரும் மண்டையை பிய்த்துக் கொண்டு இருப்பார்கள்.
ஹீரோயின்  Banks ஒரு மொழி வல்லுனர் (linguistic expert) . இராணுவம் ஏலியன்கள் உடன் தொடர்பு கொள்ள Banks ன் உதவியை நாடுவார்கள். இவருடன் சேர்ந்து இயற்பியல் வல்லுநர் ஆன Ian இந்த பணியில் ஈடுபடுவார். 
இருவரும் சேர்ந்து ஏலியன்கள் உடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வது தான் படம். 
ஏலியன்கள் உடன் தொடர்பு கொண்டார்களா ? அவர்கள் வந்த நோக்கம் என்ன ? என்பதை அருமையான திரைக்கதையில் ஒரு நல்ல ட்விஸ்ட் வைத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். 
பரபரப்பான படம் ,ஏலியன் அட்டாக், சேஸிங் வகையான பரபரப்பான படங்கள் தான் பிடிக்கும் என்பவர்கள் தவிர்த்து விடுங்கள். 
மெதுவாக செல்லக்கூடிய படம். ஆனால் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும். 
ஏலியன்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்யும் போது கொடுக்கப்படும் சத்தங்கள் அருமை. பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.
Dr. Banks கதாபாத்திரத்தில் Amy Adams அருமையாக நடித்து உள்ளார். Ian கதாபாத்திரத்தில் Jeremy Renner க்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥
Director: Denis Villeneuve
Cast: Amy Adams, Jeremy Renner, Forest Whitaker, Michael Stuhlbarg, Mark O’Brien, Tzi Ma
Screenplay: Eric Heisserer, based on the short story “Story of Your Life” by Ted Chiang
Cinematography: Bradford Young
Music: Johann Johannsson
Blade Runner 2049 – 2017
இதற்கு முன்னாள் 1998 ஆம் வருடம் Harrison Ford நடித்து வெளிவந்த இதே பெயருடைய படத்தின் தொடர்ச்சியாக வந்து உள்ளது. ஆனால் முதலில் வந்த படத்தை பார்க்க வேண்டும் என அவசியம் இல்லை. 
படம் ஆரம்பிப்பது 2049 ஆம் ஆண்டு.
2020 க்கு முன்பு Tyrell எனும் கம்பெனி செயற்கை மனிதர்களை(Replicants)  உருவாக்கி கடினமான வேலைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால் புரட்சி பண்ணுகிறார்கள். இதனால் Tyrell கம்பெனி நஷ்டத்தில் போய் அழிந்து விடுகிறது. 
2020 ல் வந்த ஒரு காந்தப் புயல் டிஜிட்டல் டேட்டாகளை அழித்து உலகத்தையே உலுக்கி பஞ்சத்தில் தள்ளுகிறது. 
இன்னொரு விஞ்ஞானி Wallace செயற்கை விவசாய முறைகளை கண்டறிந்து உலகத்தை காப்பாற்றுகிறார். இவர்கள் மனிதனின் கட்டுப்பாட்டில் உள்ள செயற்கை மனிதர்களை உருவாக்கி கடினமான வேலைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
செயற்கை மனிதர்களுக்கு சொந்தமாக ஞாபகங்கள் என்று எதுவும் கிடையாது. ஞாபகங்கள் செயற்கையாக உருவாக்கி இவர்களுக்கு செலுத்தப்படும்.
இந்த மனிதர்களில் சிலவற்றை Blade Runner ஆக பயன்படுத்தி வருகிறார்கள். 
Blade Runner களின் முக்கிய வேலை பழைய மாடல் Replicants ஐ தேடிப்பிடித்து கொல்லுவது.
படத்தின் ஹீரோ Ryan Gosling .. K எனப்படும் Blade Runner ஆக வருகிறார்.  ஒரு பழைய Replicant ஐ கொல்லும் இடத்தில் ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார். அந்த ரகசியம் வெளியே தெரிந்தால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என்பதால் அதனை மறைக்க பல குரூப்புகள் துரத்துகின்றன. 
அவர்களிடமிருந்து தப்பித்து ரகசியத்தை காப்பாற்றினாரா? உலகத்தின் எதிர்காலம் என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள். 
படம் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் .. Sci Fi , action , chasing , Sentiment , romance, mystery என எல்லாமே உள்ளது. அதுவும் நாயகன் தன்னுடைய பிறப்பை பற்றி நம்பிக்கொண்டு இருப்பதை உடைக்கும் ட்விஸ்ட் பக்கா. 
கிராஃபிக்ஸ் , பிண்ணனி இசையில் Hans Zimmer கலக்கி இருக்கிறார் , செட்டிங்குகள் மிரட்டி இருக்கிறார்கள். Ana de Arams ஒரு AI பெண்ணாக அங்காங்கே வருகிறார். 
பிரபலமான ஹீரோ மற்றும் பழைய Blade Runner படத்தின் ஹீரோவான Harrison Ford கடைசியில் கொஞ்சம் நேரம் வருகிறார். 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 
🔥🔥🔥🔥🔥
 
Director: Denis Villeneuve
Cast: Ryan Gosling, Harrison Ford, Ana de Armas, Robin Wright, Jared Leto, Sylvia Hoeks, Mackenzie Davis, Dave Bautista, Carla Juri
Screenplay: Hampton Fancher and Michael Green, based on characters by Philip K. Dick
Cinematography: Roger Deakins
Music: Hans Zimmer, Benjamin Wallfisch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Boss Level – 2021Boss Level – 2021

இது ஒரு Sci Fi + Time loop Concept படம். கொஞ்சம் Comedy + நிறைய Action.  படம் பார்த்தற்கான காரணங்கள்.  Mel Gibson, Naomi Watts and Time Loop concept.  படத்தை பத்தி முடிஞ்ச வரைக்கும் ஸ்பாய்லர்

The Nightingale – 2018The Nightingale – 2018

1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில்  நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.  IMDb 7.3 Tamil dub ❌ Violent Content  தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம். 

ஹெர் (Her) – 2013ஹெர் (Her) – 2013

ஹெர் (Her) – 2013 எதிர்காலத்தில் நடக்கும் கதை. தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளன் அவன் வீட்டு கணினியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்ட OS (Operating System) மீது காதலில் விழுகிறார். இந்த வினோதமான காதல் நீடிக்குமா?