The Hidden Face – 2011

Spanish –  mystery thriller படம் இது. 

ஹீரோவோட லவ்வர் திடீர்னு ஒருநாள் காணாமல்  போயிருவா. அதுக்கு அப்புறம் அவங்க வாழ்ந்த அந்த வீட்டைச் சுத்தி நடக்கும் சம்பவங்கள் தான் படம் ‌. 
IMDb 7.4
தமிழ் டப் இல்லை. 
ட்விஸ்ட் எல்லாம் தரமா இருக்கும்.. 
செம படம் கண்டிப்பாக பாருங்கள். 
ஹீரோவோட கேர்ள் ப்ரண்ட் ஒரு நாள் வீடியோல Bye னு சொல்லிட்டு காணாமல் போய்டுறா. இவனும் கொஞ்ச நாள்ல வேறு ஒரு பொண்ணு கூட பழக ஆரம்பிக்கிறான். 
அதுக்கு அப்புறம் புது லவ்வர் வீட்டில் தனியா  இருக்கும்போது  சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன.
ஏன் அப்படி நடக்குது ? 
அவனோட பழைய லவ்வருக்கு என்ன ஆனது என்பதை செம சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் வைச்சு சொல்லிருக்காங்க. 
படத்தோட டைட்டில் வித்தியாசமா பாத்ரூமோட வாஷ் பேசின் தண்ணில தான் போடுறாங்க. 
நான் கூட ஈரம் படத்துல வர்ற மாதிரி தண்ணில வர்ற பேய்னு நெனச்சேன். படத்துலயும் அதுமாதிரி காட்சிகள் நெறைய இருக்கு. 
படத்தை பத்தி ஸ்பாய்லர் தர கூடாதுன்னு இதோட நிறுத்திக்கிறேன். 
ஆன ஒரு முக்கியமான ட்விஸ்ட் தெரிஞ்சதும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கொஞ்சம் யூகித்து விடலாம். 
பக்காவான திரில்லர் கண்டிப்பாக பாருங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Kimi – 2022Kimi – 2022

Ocean 11, Erin Brokovich , Logan Lucky போன்ற நல்ல படங்களை இயக்கிய  Steven Soderbergh ன் படம் .  ஒரு IT Company employee ஏதாச்சையாக ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். 

Zero Dark Thirty – 2012Zero Dark Thirty – 2012

 Twin Tower தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பிறகு பின்லாடனை எவ்வாறு அமெரிக்கா கண்டுபிடித்த கொன்றது என்பதை பற்றிய படம்.  பின்லாடனை எவ்வாறு தேடி கண்டு பிடித்தார்கள் மற்றும் அவனை கொல்ல நடந்த ஆபரேஷன் உடன் படம் முடிகிறது. குறிப்பாக ஒரு பெண் அதிகாரி

Knives Out (2019) & Gone Baby Gone (2007)Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review  இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம்.  இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation – 🔥🔥🔥🔥🔥 Strongly Recommended.  ரெண்டு படமுமே அடுத்து