Hell Or High Water – 2016

 

இது ஒரு செமயான க்ரைம் த்ரில்லர். 

இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அண்ணன் சரியான முரடன். வாழ்க்கையில் பாதி நாள் சிறைச்சாலையில் கழித்தவன். 

தம்பி பெரிய அளவில் எதிலும் சிக்காமல் இருப்பவன். சமீபத்தில் டிவோர்ஸ் ஆனவன்.

நம்ம பரம்பரை தான் ஏழை, தன் மகனாவது பணக்காரனாக இருக்க வேண்டும் என நினைக்கிறான் தம்பி. 

இருந்த ஒரே குடும்ப Ranch தங்கள் தாயின் மறைவிற்குப் பின்னர் கைவிட்டு போகும் நிலை.

ஒரு வாரத்தில் கையை விட்டுப் போகும் நிலையில் அதை மீட்க அண்ணனுடன் சேர்த்து பக்காவாக ஃப்ளான் போடுகிறான் தம்பி.

ரொம்ப short ‘a spoiler இல்லாமல் சொல்லணும்னா லோன் குடுத்த பேங்கல இருந்து கொள்ளை அடிச்சு அந்த கொள்ளையடிச்ச பணத்தை வைச்சு லோனை அடைக்கிறது தான். 

இந்த திட்டத்தை எப்படி செயல்படித்தினார்கள் என்பதை கூறினால் சுவாரஸ்யம் போய்விடும். அதனால் படத்தில் பாருங்கள்.

அந்த Ranch ஏன் அவ்வளவு முக்கியம் என்பது சின்ன சஸ்பென்ஸ்.

இவர்களை பிடிக்க முயற்சி பண்ணும் இரண்டு போலீஸ்காரர்கள். 

பக்காவாக ஃப்ளான் பண்ணியதால் தடயங்கள் இல்லாத நிலையில் இவர்கள் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்.

படம் மெதுவாக சென்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதை

ஒரு மணி நேரம் ஸ்லோ பர்னராக போகும் படம் கடைசி 30 நிமிடங்கள் டாப் கியரில் போகிறது. ஒளிப்பதிவு செம சூப்பராக இருந்தது.

கண்டிப்பாக பாருங்கள்

குடும்பத்துடன் பார்ப்பது கஷ்டம் தான். 

IMDb – 7.6

OTT – ல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Monsters – 2010Monsters – 2010

இது ஒரு ஏலியன் Sci Fi + Romantic படம்.  வேற கிரகத்துக்கு ஆராய்ச்சி பண்ண போன ஒரு விண்கலம் அமெரிக்கா – மெக்சிகோ பார்டரில் விழ அதிலிருந்து ஏலியன்கள் பரவ ஆரம்பிக்கிறது.  அந்த ஏரியா முழுவது சீல் செய்யப்படுகிறது. இதில்

Pothanur Thabal Nilayam – 2022Pothanur Thabal Nilayam – 2022

ஒரு டீசன்ட்டான Heist படம். 1990 களில் நடப்பது போன்று பக்காவாக எடுக்கப்பட்டுள்ளது.  முதல் பாதி கொஞ்சம் இழுவை , இரண்டாவது பாதி ரொம்ப நல்லா இருந்தது.  அறிமுக இயக்குனர் + படத்தின் ஹீரோ உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த

Wind River (வின்ட் ரிவர்) – 2017Wind River (வின்ட் ரிவர்) – 2017

 ஒரு திறமையான வேட்டைக்காரன் கோரி (Jeremy Renner). வேட்டைக்கு செல்லும் போது கொல்லப்பட்டு பனியில் உறைந்து போன பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்கிறார்.  இந்த வழக்கை விசாரிக்க வரும் இளம் FBI பெண் அதிகாரி‌ Jane க்கு  (Elizabeth Olsen) கொலையாளிகளை கண்டுபிடிக்க