Real Steel – 2011

Real Steel – 2011 Movie Review In Tamil 

எதிர்காலத்தில் ரோபோக்களை வைத்து போட்டி சண்டைகள் நடத்தும் காலகட்டத்தில் நடக்கும் கதை.‌

IMDb 7

Tamil dub ✅

Available @Sonyliv

அப்பாவும் மகனும் குப்பையில் கிடைத்த பழைய ரோபாட்டை உபயோகித்து எப்படி World Champion ஆனார்கள் என்பதை சொல்லும் படம்.

Real Steel movie review in tamil, watch real steel tamil dubbed movie, real steel 2 movie, real Steel movie download ,high Jackman tamil dub movie

இந்த படம் ஏதோ ஒரு சேனல்ல எப்ப பார்த்தாலும் போட்டுட்டு இருப்பாங்க. நல்ல படம் கண்டிப்பா குடும்பத்துடன் பாக்கலாம்.

  

ஹீரோ
High Jackman (The Prestige, Prisoners) ஒரு முன்னாள் பாக்சர். ஒரு போட்டியில் அவரது ரோபோ அடித்து துவைக்கப்படுகிறது.  

வேறு ரோபோ வாங்க காசு இல்லாத நிலையில் குப்பையில் ஒரு ரோபோவை கண்டுபிடிக்கிறான் மகன். 

ஹீரோவுக்கு இந்த ரோபோவை உபயோகிக்க பிடிக்காவிட்டாலும் மகனின் தொந்தரவு தாங்காமல் சரி என ஒத்துக்கொண்டு அதை சரி பண்ணுகிறார்கள். 

இந்த ரோபோட்டில் Shadow Function என்ற ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு எதிர் பக்கத்தில் நின்று எதை செய்தாலும் அதை ரோபோ அப்படியே திரும்ப பண்ணும். 

இந்த பழைய ரோபோவை வைத்துக்கொண்டு World Champion போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் வெல்ல வேண்டும் என்றால் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த Zeus எனும் ரோபோவை வீழ்த்த வேண்டும். வென்றார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

ரோபோ ஃபைட் எல்லாம் அருமையா எடுத்து இருப்பார்கள். ரோபோ மற்றும் பையன் வரும் காட்சிகள் நல்லா இருக்கும். 

க்ளைமாக்ஸ் பக்கா 🙌

கண்டிப்பா பாக்க வேண்டிய நல்ல டைம் பாஸ் படம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Matrix Resurrections – 2021The Matrix Resurrections – 2021

The Matrix Resurrections – 2021 Movie Review In Tamil The Matrix படத்தின் நான்காவது பாகமாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே  வந்துள்ளது ‌‌.   நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை படம் மிகப்பெரிய பெரிய ஏமாற்றமே. IMDb

Troll- 2022 – NorwayTroll- 2022 – Norway

Troll Review  பெரிய மலை மனிதன் திடீர்னு எந்திரிச்சு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு சிட்டிய நோக்கி வர்றான். ஹீரோயின் & Co தடுத்து நிறுத்தினார்களா ? Graphics ✅ Kids ✅✅ Monster Movie lovers ✅ Tamil dub ❌

Lost – Series -2004 – 2010Lost – Series -2004 – 2010

Lost Series Review In Tamil  ஒரு ஃப்ளைட் திடீரென தடம் மாறி ஒரு அமானுஷ்யம் நிறைந்த தீவுக்குள் போய்விடும்.  அவர்களால் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாது.  6 Seasons, 119 Episodes  Tami dub ❌ OTT ❌