The Night Manager – தி நைட் மேனேஜர் (2016) – Limited Series

இது UK – வில் இருந்து வந்துள்ள 6 எபிசோட்கள் கொண்ட மினி திரில்லர் தொடர்.

கதை என்னவோ பலமுறை சொல்லப்பட்ட நல்லவர்கள் Vs கெட்டவர்கள் கான்செப்ட் தான்.

Jonathan Pine ( Tom Hiddleston) – Avengers படங்களில் Loki கதாபாத்திரத்தில் வருபவர். எகிப்து நாட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் Night Manager ஆக வேலை பார்த்து வருகிறார்.

Richard Roper(Hugh Laurie) – ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கொடூரமான சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தும் ஒரு ஆயுத வியாபாரி .

Angela Burr ( Olivia Colman ) – Broadchurch – பிரிட்டிஷ் இன்டெலிஜென்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் அதிகாரி. Roper – செய்யும் ஆயுதங்கள் கடத்தலால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அவனை பிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்பவர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் Roper-ஐ எதுவும் பண்ண முடியாமல் தவித்து வருகிறார்.

Pine விரும்பும் மற்றும் காப்பாற்ற நினைக்கும் ஒரு பெண் Roper ஆட்களால் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்து தலைமறைவாகிறார்.

சில வருடங்கள் கழித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு ரிச்சார்ட்டில் வேலை செய்கிறார். அங்கு தற்செயலாக Roper தங்க வருகிறார். இம்முறை அவரை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார்.

Pine ஒரு ஹோட்டலில் Angela – வை சந்திக்கிறார். Pine Roper குழுவில் இணைந்து அதன் மூலமாக ஆதாரங்களை திரட்ட திட்டம் இடுகின்றனர்.

புத்திசாலித்தனமாக Roper மகனை கடத்துவது மற்றும் காப்பாற்றுவதாக நாடகம் செட்டப் செய்து கூட்டத்திற்கு ஊடுருவுகிறார் Pine. ‌

சிறிது சிறிதாக Roper -ன் நம்பிக்கையை பெற்று அவரது கோட்டையை எவ்வாறு உள்ளிருந்து தகர்க்கிறார் என்பது தான் மீதி தொடர்.

திரைக்கதை செம சூப்பராக உள்ளது. மெதுவாக நகர்ந்தாலும் போரடிக்கவில்லை‌. படம் பிடித்த லொக்கேஷன்கள் அடிக்கடி ஜேம்ஸ் பாண்ட் படங்களை ஞாபகப் படுத்துகிறது. ‌

படம் லண்டன், Roper வசிக்கும் தீவு, எகிப்து என பல நாடுகளில் கதை பயணிப்பதால் கொஞ்சம் பார்க்காமல் விட்டாலும் புரியாமல் போய்விடும்.

Tom Hiddleston, Olivia Colman மற்றும் Hugh Laurie சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயிசம் இல்லாத இயல்பாக எடுக்கப்பட்ட அருமையான ஸ்பை திரில்லர்.

கண்டிப்பாக பாருங்கள்..

Available in Amazon Prime Video

IMDb Rating : 8.1

Director: Susanne Bier

Producer: Rob Bullock

Screenplay: David Farr (based on the novel by John Le Carré)

Music: Víctor Reyes

Cast:

Jonathan Pine: Tom Hiddleston

Richard Onslow Roper: Hugh Laurie

Jed Marshall: Elizabeth Debicki

Angela Burr: Olivia Colman

Sophie Alekan: Aure Atika

Lance Corcoran: Tom Hollander

Rob Singhal: Adeel Akhtar

Simon Ogilvey: Russell Tovey

Permanent Secretary: Katherine Kelly

Rex Mayhew: Douglas Hodge

Mercedes: Marta Torné

Sandy Langbourne: Alistair Petrie

Caroline Langbourne: Natasha Little

Juan Apostol: Antonio de la Torre

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Silent Sea – 2021The Silent Sea – 2021

The Silent Sea Tamil Review  2022 வது வருடத்தின் முதல் பதிவு. Happy New Year To All  கொரியாவில் இருந்து வந்துள்ள Sci Fi சீரிஸ்.  1 Season , 8 Episodes வெளியாகி உள்ளது.  நான் இந்த

தி மெண்டலிஸ்ட்‌ (The Mentalist)தி மெண்டலிஸ்ட்‌ (The Mentalist)

தி மெண்டலிஸ்ட்‌ (The Mentalist Tamil Review) நாயகன் அதீத மூளைக்காரன் தாமாகவே முன்வந்து காவல்துறைக்கு உதவி செய்கிறார். குற்றம் நடந்த இடத்தில் உள்ள மிகச்சிறிய தடயங்களை கூட ஆராய்ந்து அதன் மூலமாக குற்றவாளிகளை கைது செய்ய உதவுகிறார். இது தவிர

Black Bird – 2022 – Mini SeriesBlack Bird – 2022 – Mini Series

Apple Tv ல வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் Crime, Investigation Thriller வகையை சேர்ந்த ஒரு மினி சீரிஸ். IMDb 8.4⭐, 1 Season, 6 Episodes, Tamil dub ❌ உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் கில்லர் பற்றிய