The Place Beyond The Pines(2012)

இது ஒரு க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படம்.

2 மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகளை சொல்கிறது. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் கலவரம் எதுவும் பண்ணாமல் எளிமையான திரைக்கதை மூலம் படம் நகர்கிறது…
Luke (Ryan Gosling – Drive, La La Land ,Blue Valentine) – ஒரு சர்க்கஸ் கம்பெனியில் கூண்டுக்குள் பைக் ஒட்டும் சாகசங்களை செய்பவர். நிரந்தர வருமானம் கிடையாது சர்க்கஸ் கம்பெனி போகும் இடமெல்லாம் இவரும் செல்கிறார். வாழ்க்கையில் பெரிதாக பிடித்தம் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார். 
Romina – (Eva Mendes – Fast Five,Ghost Rider ) ன் மூலமாக தனக்கு மகன் பிறந்ததை அறிகிறார். இதனால் வாழ்வில் பிடிப்பு வருகிறது மகன் மற்றும் காதலியை நல்ல முறையில் வாழ வைக்க நிறைய பணம் தேவைப்படுகிறது.. இதனால் லோக்கல் மெக்கானிக் உடன் இணைந்து சட்ட விரோதமான காரியங்களை செய்ய துணிகிறான். 
Avery (Bradley Cooper – Siver linings playbook , Avengers ) – சட்டம் படித்து விட்டு போலீசாக வேலைக்கு வருகிறார். போலீஸ் டிபார்ட்மெண்ட் முழுவதும் ஊழலில் ஊறிப்போய் கிடைக்கிறது. எப்படியாவது டிபார்ட்மெண்ட்டில் முன்னேற வேண்டும் என நினைக்கிறான்.
ஒரு கட்டத்தில் Luke கொள்ளையில் ஈடுபட்டு தப்பிக்க முயலும் போது அங்கு போலீசாக வரும் Avery அவனை சுட்டுக் கொன்று விடுகிறான். 
இதனால் ஹீரோவாக கொண்டாடப்பட்டு பணியில் முன்னேற்றம் அடைகிறான். 
படம் 15 வருடங்கள் முன்னோக்கி நகர்கிறது. இருவருக்கும் டீன் ஏஜ் வயதில் மகன்கள் உள்ளனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்து நண்பர்களாக மாறுகின்றனர். இருவருக்கும் தங்களுடைய அப்பாக்களின் கடந்த காலம் தெரிய வரும் போது என்ன நடக்கிறது என்பது மீதி படம். 
படத்தின் நீளம் அதிகம் என்பதால் நிறைய நேரம் பேசிக்கொண்டே இருக்கின்றனர். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். 
படம் ஆரம்பத்தில் பரபரப்பாக செல்கிறது ஆனால் திடீரென்று Luke கொல்லப்படுவது எதிர்பாராத ஒன்று. அதன் பின்னர் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. 
நடிப்பை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 
நல்ல படம் .. ஒரு டைம் பார்க்கலாம்… 
IMDb Rating : 7.3/ 10
Available in Netflix 
Director: Derek Cianfrance
Cast: Ryan Gosling, Bradley Cooper, Eva Mendes, Rose Byrne, Dane DeHaan, Emory Cohen, Ray Liotta, Bruce Greenwood, Ben Mendelsohn
Screenplay: Derek Cianfrance, Ben Coccio, Darius Marder
Cinematography: Sean Bobbitt
Music: Mike Patton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Jurassic Park Dominion – 2022Jurassic Park Dominion – 2022

பிரபலமான Jurassic Park படங்களின் வரிசையில் கடைசி மற்றும் 4 வந்து பாகமாக வந்துள்ள படம்.  நான் ஜிராஸிக் பார்க் படங்களின் பெரிய ஃபேன் படம் எனக்கு பிடிச்சு இருந்தது 😊 IMDb 5.7 Tamil dub ✅ Available @primevideo

The Terror Live – 2013The Terror Live – 2013

 இது ஒரு பக்கா கொரியன் திரில்லர் . ஹீரோ ஒரு பிரபலா டிவி ரிப்போர்ட்டர் ஆனால் சரியா டைம் Workout ஆகாம ரேடியோ ஜாக்கியா Demote ஆனவர்.  ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபலமாக முயற்சி செய்கிறான். அது அவனுக்கு வினையாக முடிகிறது.   ஒரு

Shut In – 2022Shut In – 2022

ஒரே ரூமுக்குள் நடக்கும் ஹாரர் திரில்லர் இது.  இரண்டு சின்ன குழந்தைகளுடன் வசிக்கும் அம்மா ரூமுக்குள் மாட்டிக்கிறார். வெளியில் தனியாக விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. உள்ளே இருந்து கொண்டு எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பது தான் படம்.  IMDb 6.4