Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020)

Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020) – Review In Tamil 

பிரபல OTT நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம். 

இது 1800-களில் பிரிட்டனில் நடப்பது போன்ற கதை ஆக்ஷ்ன் கலந்த அட்வென்சர் திரைப்படம்.

Enola Holmes review in tamil, எனோலா ஹோம்ஸ் விமர்சனம், netflix Sherlock Holmes, louis patridge, Milli Bobby Brown, Sherlock, enola Holmes cast, Sherloc

 

பிரபல தொடரான Stranger Things-ல் Eleven என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறு பெண் வருவார் . ஒருவித வெட்கத்துடன் Physiological பவர் கொண்ட வெகுளியான கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். இப்போது வளர்ந்து நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். 

Elona Holmes (திருப்பி போட்டால் Alone) பிரபல துப்பறியும் நிபுணரான Sherlock Holmes – ன் தங்கை. இவரது இன்னொரு அண்ணண் Mycroft Holmes பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய ஆள். இரண்டு அண்ணண்களும் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். துணிச்சலான பெண்ணியம் பேசும் அம்மா Elona – வை தனிமையில் வளர்க்கிறார். படிப்பு, தற்காப்புக் கலைகள் , புதிர்களை விளையாட்டு என அனைத்திலும் திறமையானவராக தனிமையில் வளர்க்கிறார். 

திடீரென ஒருநாள் Elona – வின் அம்மா காணமல் போய் விடுகின்றார். திரும்ப வரும் அண்ணன்கள் கட்டுப்பாடு பிடிக்காமல் தன் அம்மாவை தேடி கிளம்புகிறார். 

இந்த பயணத்தில் இவர் செய்யும் ஆக்ஷ்ன் மற்றும் அட்வென்சர் தான் படம். 

அம்மாவை தேடி லண்டன் செல்லும் வழியில் இரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது ஒரு இளைஞனை சந்திக்கிறார். அந்த இளைஞனை கொலை செய்ய வரும் ஒருவனிடம் இருந்து அவனை காப்பாற்றுகிறார். 

லண்டன் வந்து சேரும் Elona தன் அம்மா ஒரு புரட்சி அமைப்பை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கிறார். அதே சமயம் ரயிலில் காப்பாற்றிய இளைஞனை சுற்றி நடக்கும் சதிகளை கண்டுபிடித்து அவனை காப்பாற்ற முடிவு எடுக்கிறார். கூடவே அவளுடைய அம்மாவையும் தேடுகிறார்.

இதே சமயம் இரண்டு அண்ணண்களும் இவரை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ்யை முந்தி சென்று Elona எவ்வாறு இந்த சிக்கலான முடிச்சுகளை விடுவிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள். 

Elona கதாபாத்திரத்தில் Millie Bobby Brown சிறப்பான அறிமுகம். சிறு பெண்ணாக Stranger Things – ல் பார்த்தது இதில் நாயகி. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அவர்தான் . படம் முழுவதும் அவரை சுற்றியே தான் நகர்கிறது. சென்டிமென்ட், ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என கலக்கி இருக்கிறார். நாயகியாக மிகவும் சிறப்பான அறிமுகம் …ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். 

Sherlock Holmes கதாபாத்திரத்தில் Henry Cavill நேர்த்தியான அளவான நடிப்பு. 

படம் சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. படத்தின் நீளமும் அதிகம். 

பிண்ணனி இசை மற்றும் பழைய ‌கால பிரிட்டிஷ் காலத்தை படம் பிடித்த விதம் அருமை. 

குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம். 

Cast: Millie Bobby Brown, Henry Cavil, Sam Claflin, Helena Bonham, Louis Partridge.

Director: Harry Bradbeer

Streaming: Netflix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Attack The Block – 2011Attack The Block – 2011

இந்த படம் 2011 – ல் பிரிட்டனில் இருந்து வந்த காமெடி, ஹாரர் கலந்த ஒரு ஏலியன் படம்.  நானும் இருக்குற எல்லா ஏலியன் படத்தையும் வளைச்சு வளைச்சு பார்த்து விட்டேன் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான ஏலியன் கதைக்களம் கொண்டது.