Se7en – செவன் (1995)

Se7en (Seven) – செவன் (1995)  – Tamil Review 

இந்த திரைப்படம் Thriller, Crime, Physiological thriller, Serial killer என எந்த வகையான Genre எடுத்துக் கொண்டாலும் டாப் 3 படங்களில் இருக்கும். 

Se7en movie review in tamil, seven, செவன் திரைப்பட விமர்சனம், morgan freeman, Brad Pitt , David Fincher, seven movie cast, movie Anniversary

பிரபல இயக்குனரான David Fincher (The Girl With Dragon Tattoo)  அவர்களின் மாஸ்டர் பீஸ் திரைப்படம். இத்திரைப்படத்தின் இரசிகர்கள் படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடி வருகின்றனர். நானும் இந்த படத்தை பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இன்னொரு முறை பார்த்தேன். பார்த்து விட்டு இந்த அளவு சிறப்பான திரைப்படம் பற்றி எழுதாமல் விட்டால் எப்படி…. 

பெரும்பாலான திரைப்பட பிரியர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள்… இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்… படம் கொஞ்சம் சீரியசான கதைக்களம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 

படத்தின் ஹீரோக்கள் இரண்டு பெரிய தலைகள்.. ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகும் டிடெக்டிவ் சோமர்செட் கதாபாத்திரத்தில் Morgan Freeman மற்றும் புதிதாக அந்த ஊருக்கு மாறுதல் வாங்கி வந்திருக்கும் இளம் டிடெக்டிவ் மில்ஸ் கதாபாத்திரத்தில் Brad Pitt . 

ஊருக்குள் ஒரு கொலை நடக்கிறது. கொலை வித்தியாசமாக முறையில் குண்டான ஒருவனை துப்பாக்கி முனையில் சாப்பிட வைத்தே கொன்று உள்ளான் கொலைகாரன். இரண்டு டிடெக்டிவ்களும் இணைந்து விசாரணையில் இறங்குகிறார்கள். 

மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இந்த முறை துப்பாக்கி முனையில் ஒரு வக்கீலை மிரட்டி அவனுடைய சதையை அவனையே அறுக்க வைத்து கொடூரமாக கொன்றுள்ளான். தரையில் ரத்தத்தால் Greed என எழுதப்பட்டுள்ளது. 

பின்னர் விசாரணையில் முதல் கொலையில் Gluttony என்கிற வார்த்தை எழுதப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கிறார் சோமர்செட். 

இதனை ஆராய்ந்து கொலைகாரன் Seven Deadly Sins ( Gluttony, Greed, Pride, Lust, Envy, Lust and Sloth) அடிப்படையில் கொலைகளை செய்கிறான் என்று கணிக்கிறார். இன்னும் 5 கொலைகள் நடக்கும் என்கிறார். 

அதே போல மேலும் 3 கொலைகள்(Pride, Lust, Sloth) நடக்கிறது. கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணற திடீரென வந்து சரணடைகிறான் கொலையாளி John (Kevin Spacey)

எதற்கு சரணடைந்தான்? மிச்சம் உள்ள இரண்டு கொலைகளை செய்து முடிக்காமல் ஏன் சரணடைந்தான் என்பதை படத்தில் பாருங்கள். 

படம் முழுவதும் சஸ்பென்ஸ் உடன் ஆரம்பத்தில் இருந்து பரபரவென செல்கிறது. சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் செய்ய உபயோகிக்கும் முறைகள் நமக்கு அதிர்ச்சி தருகிறது. 

Morgan Freeman மற்றும் Brad Pitt நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளனர். 

சைக்கோ கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் Kevin Spacey தெரிக்க விட்டு இருக்கிறார்…

என்ன ஒரு அற்புதமான க்ளைமாக்ஸ்… What’s in the box ?? 

படம் வந்து 25 வருடங்கள் ஆகிறது ஆனால் இப்ப ரிலீஸ் ஆன படம் மாதிரி தான் இருக்கிறது. 

கண்டிப்பாக ஷங்கர் அந்நியன் படத்தை (கருட புராணம் கான்செப்ட்) இந்த படத்தை பார்த்து inspire ஆகிதான் உருவாக்கி இருப்பார் என நினைக்கிறேன். 

IMDb Rating : 8.6

இது வரை வெளிவந்த படங்களில் IMDb -ல் 20 -வது இடத்தைப் பிடித்துள்ளது இந்த படம்.

Available in Netflix 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Unhinged – அன்ஹிஞ்ட் – 2020Unhinged – அன்ஹிஞ்ட் – 2020

Gladiator பட ஹீரோ Russell Crowe நடிச்ச திரில்லர் படம் இது. அவரு வேற தாடி வைச்சு வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். படம் டைட்டில் போடும்போதே எத பத்தினு ஒரு ஐடியா கிடைச்சது.  ட்ராஃபிக்ல போடுற சண்டை, பொதுவாக

Holy Spider – 2022Holy Spider – 2022

Holy Spider Tamil Review  ஈரானில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஒருவன். நான் ஊரை சுத்தம் பண்றேன் என்று விபசாரம்  செய்யும் பெண்களை கொல்கிறான். இதை கண்டுபிடிக்க வரும்  பெண் நிருபர் சந்திக்கும் சவால்கள்.  IMDb 7.3 🟢  Tamil

Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015

Marvel தயாரித்து வெளியிட்டு உள்ள தொடர்.  சூப்பர் ஹீரோ கதைகளுக்கு பெயர் போன மார்வெல் தயாரித்த தொடர் என்பதால் சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும் என நினைத்தேன்.  தொடரின் ஆரம்பத்தில் கண் தெரியாத ஹீரோ ஆக்ரோசமாக சண்டையிடும் போதும் சூப்பர் ஹீரோ