ஜாம்பிலான்ட் – Zombieland (2009)

ஜாம்பிலான்ட் ( Zombieland)

இது நகைச்சுவை கலந்த திகில் வகையை சார்ந்த ஜாம்பி திரைப்படம்.
உலகம் அழிந்த பின் அமெரிக்காவில் தப்பித்த நால்வர் மற்றும் அவர்களின் சாலை பயணங்களை (ஜாம்பிக்களின் நடுவில்) ஜாலியாக சொல்லும் திரைப்படம்.
Zombieland movie review in tamil , ஜாம்பிலான்ட் திரைப்பட விமர்சனம் தமிழில். Jesse Eisenberg , Emma Stone, Abigail Bresline, Woody Harrelson .
ஒரு இளைஞன் (பெற்றோர்களை சந்திப்பது இலக்கு), ஒரு மத்திய வயது ரௌடி (உலகின் கடைசி க்ரீம் பன்னை சாப்பிட இலக்கு மற்றும் வழியில் எவ்வளவு ஜாம்பீஸ்களை கொல்ல முடியுமோ அவ்வளவையும் கொல்வது இலக்கு ‌), இரு சகோதரிகள்(amusement park செல்வது இலக்கு) அனைவரும் எதிர்பாராத விதமாக  இணைந்து சாலை பயணம் மேற்கொள்கிறாரகள்.
பயணத்தின் போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஒருவரை பற்றி மற்றவர் அறிந்து கொள்கின்றனர்.  
படம் முழுக்க நகைச்சுவை கலந்த வசனங்கள் அருமை. முரடனாக வரும் Woody Harrelson நகைச்சுவை மற்றும் அதிரடியில் கலக்கி இருக்கிறார். 
சகோதரிகளாக Emma Stone and Abigail Bresline குறும்புத்தனமான பாத்திரத்தில் சிறப்பான முறையில் பொருந்தி உள்ளனர். 
தனக்கு என சில விதிகளை விதித்து அதன் படி நடக்கும் ஹீரோ கதாபாத்திரத்தில் Jesse Eisenberg . வெகுளியான இளைஞன் கதாபாத்திரத்தில் வந்து சகோதரிகளில் ஒருவர் மீது காதலில் விழுகிறார்.
சகோதரிகள் இருவரும் தனியாக amusement park ல் மாட்டிக் கொள்வது. மற்ற இருவரும் சரியான நேரத்தில் வந்து இவர்களை காப்பாற்றிய‌ பிறகு வரும் சண்டை ‌காட்சிகளும் மிகச் சிறப்பாக உள்ளது. 
நெட்ஃபிளிக்ஸ்ல் பார்க்கலாம் : https://www.netflix.com/title/70123542?s=a&trkid=13747225&t=cp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ajji – 2017Ajji – 2017

Ajji Marathi Movie Review In Tamil இது ஒரு க்ரைம் ட்ராமா படம்.  60+ வயது பாட்டி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பேத்திக்காக பழிவாங்கும் கதை‌.  ஏழ்மையான நிலையில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம். 10 வயது குழந்தையை

#Alive – #அலைவ் (2020)#Alive – #அலைவ் (2020)

 இது கொரியாவில் இருந்து வந்த ஜாம்பி திரைப்படம். ஆனால் மொத்தமாக ஜாம்பியை மற்றும் நம்பாமல் கொஞ்சம் எமோஷனல் விஷயங்களையும் கலந்து கொடுத்து உள்ளனர்.  இது சர்வைவல் பற்றிய திரைப்படம். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஜாம்பியாக மாறி நாம் மட்டும் தனித்து விடப்பட்டால்

ஆர்கோ (Argo) – 2012ஆர்கோ (Argo) – 2012

ஆர்கோ (Argo) – 2012 3 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இத்திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். 1979 வது வருடம் ஈரான் நாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த உள்நாட்டு கலவரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்க தூதரக அதிகாரிகளை எவ்வாறு