Singer – Minmini

 சின்ன சின்ன ஆசை பாடலில் அந்த குரல் அவ்வளவு அருமையாக இருக்கும். 

அந்த காலகட்டத்தில் பாடகர்களை பற்றி எல்லாம் அலட்டிக்கொண்டது இல்லை. 

பாட்டு நல்லா இருக்கா ? இல்லையா ? அவ்வளவு தான் என் ரசனை. 

வருடங்கள் செல்ல செல்ல யார் இந்த பாடலை பாடி இருப்பார்கள் என்று யோசிக்க தொடங்கினேன். 

அப்படி தொடங்கியதும் உடனே தோன்றிய பாடல் சின்ன சின்ன ஆசை. 

பாடியவர் மின்மினி . 

அந்த பாடல் கேட்க அவ்வளவு துள்ளல் மற்றும் இனிமையாக இருக்கும். இசை முக்கியம் என்றாலும் அந்த பாடலில் மின்மினி அவர்களின் குரல் ரொம்பவே முக்கியமான ஒன்று. 

அதன் பின்பு பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

 அதற்கு அப்புறம் பாடிய சில பாடல்கள் எனக்கு தெரியும் . 

பார்க்காதே – ஜென்டில்மேன்

பச்சைக்கிளி – கிழக்கு சீமையிலே

 எடுடா அந்த – புதிய மன்னர்கள் 

நேற்று சின்ன சின்ன ஆசை பாடல் கேட்கும் சந்தர்ப்பம் அமைத்தது. 

மறுபடியும் இவரு பாடிய பாடல்கள் என்ன என்ன ? இவ்வளவு திறமையான ஒரு பாடகி

 ஏன் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாரா ? இல்லை வேறு பிரச்சினையா என தெரிந்து கொள்ள நம்ம Google ஐ கேட்டேன். 

அவருடைய பேட்டியில் தன்னுடைய குரல் போய்விட்டது 😱 என்று சொல்லி இருக்கிறார்.

கடைசியாக 2015 ல் ஒரு மலையாள படத்தில் கோபி சுந்தர் இசையில் Come back கொடுத்து இருக்கிறார். 

 

படத்தின் பெயர் Mili . கேட்டு பார்த்தேன் குரல் நன்றாகவே இருந்தது. 

மேலும் நானே போய் சான்ஸ் கேட்குறது பிடிககல அதனால் தான் நிறைய பாடல்கள் வருவதில்லை என்றும் சொல்லி இருக்கிறார். பாடகர் மனோ தனக்கு எப்பவுமே ஆதரவாக உள்ளார் என்றும் கூறி உள்ளார். இவர் பாடியுள்ள பிற பாடல்களை பார்க்கலாம். 

அடி பூங்குயிலே – அரண்மனை கிளி 

இந்திரையோ – காதலன் 

குறுக்கு பாதையிலே – ஐ லவ் இந்தியா 

மணமகளே மணமகளே – தேவர் மகன்

சித்திரை நிலவு – வண்டிச்சோலை சின்னராசு

 

என‌ நிறைய பாடல்கள் இருக்கின்றது. 

எனக்கு என்னமோ இவர் பாடிய பல பாடல்களை இப்ப கேட்கும் போது பாடகி ஜானகி அவர்கள் குரல் போல  தெரிகின்றது. 

நல்ல திறமையான பாடகி. குரல் பிரச்சினை வராமல் இருந்து இருந்தால் ஒரு பெரிய ரவுண்ட் வந்திருப்பார். 

இப்பவும் ஒன்றும் இல்லை @ilaiyaraaja @arrahman @Jharrisjayaraj @thisisysr @anirudhofficial  போன்றோர்கள் வாய்ப்பு கொடுத்தால் பெரிய ரவுண்ட் வருவார் என நினைக்கிறேன். 

 ‌ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mini Series Recommendation – 3Mini Series Recommendation – 3

 இந்த த்ரேட்டில் மினி சீரிஸ்கள் பார்க்கலாம். குறிப்பிட்ட Genre இல்லாமல் கலவையாக இருக்கும். . Invisible City ரொம்பவே வித்தியாசமான தொடர் . மேலும் ஒவ்வொரு தொடரை பற்றிய Detailed ஆன ரிவ்யூ Blog ல் உள்ளது லிங்க் இணைத்து உள்ளேன். 

The Witch : Part 1- The SubversionThe Witch : Part 1- The Subversion

The Tiger பட டைரக்டர் மற்றும் I saw the devil படத்தின் Writer ஆன Park Hoon – Jung ன் மறறொரு தரமான படம்.  நல்ல ஒரு மர்மம் கலந்த கொரியன் ஆக்சன் படம். வன்முறைக் காட்சிகள் ரொம்பவே

Along Came A Spider – 2001Along Came A Spider – 2001

Along Came A Spider Tamil Review  ஒரு சைக்கோ கிட்ட மாடடிக்கிட்ட அரசியல்வாதியின் மகளை காப்பாற்ற முயற்சிக்கும் போலீஸ் ஹீரோ.  IMDb 6.4 Tamil dub ❌ OTT ❌ ஹீரோவாக  Morgan Freeman நடித்து இருந்ததால் பார்த்த படம்.