அன் ஸ்டாப்பபல் (Unstoppable) – 2010

கொரியன் Unstoppable பத்தி இங்க படிங்க Unstoppable- Korean Don Lee Movie
இது ஒரு பரபரப்பான சிறிது ஆக்ஷ்ன் கலந்த திரைப்படம்
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு சிறிய மனித தவறு காரணமாக ஆபத்தான வேதிப்பொருள்கள் நிறைந்த ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விடுகிறது. 
அன் ஸ்டாப்பபல் திரைப்பட விமர்சனம் தமிழில் ,  Unstoppable movie review in Tamil, Denzel Washington, டெனஷல் வாஷிங்டன் நடித்த ஹாலிவுட் விமர்சனங்கள் தமிழ்
புறப்பட்ட சிறிது நேரத்தில் முழு வேகத்தை எட்டி‌ விடுகிறது. ரயிலை நிறுத்த ரயில்வே அதிகாரிகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விடுகிறது.
ரயில் மிக விரைவாக‌‌ மக்கள் அடர்த்தி கொண்ட ஊரை நோக்கி செல்கிறது. அந்த ஊரில் மிக குறுகிய வளைவு வேறு உள்ளது. ரயில் வரும் வேகத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டால் மிக பெரிய உயிர் சேதங்கள் ஏற்படும்.
ஆனால் ரயில்வே கம்பெனியின் போர்ட் மெம்பர்கள் வழக்கம் போல அரசியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெண் அதிகாரி மட்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதே ஏரியாவில் இன்னொரு ரயிலை ஓட்டிக் கொண்டு இருக்கும் மூத்த ஓட்டுநரும் அவருடைய உதவியாளரும் பெண் அதிகாரியின்  உதவியுடன் ரயிலை நிறுத்த செய்யும் சாகசங்கள் படமாக்கப்பட்டுள்ளது..
பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைப்படம். ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் செல்வது தெரியாது.
ரயில் செல்லும் வேகம் மற்றும் அது ஒரு வாகனத்தை இடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ரத்த களரி , ஆபாச காட்சிகள் இல்லாமல் குழந்தைகளுடன் பார்க்க ஏற்ற மிகச்சிறந்த திரில்லர் படம்.
நல்ல டைம் பாஸ் திரைப்படம். 
Director: Tony Scott
Cast: Denzel Washington, Chris Pine, Rosario Dawson, Kevin Dunn
Screenplay: Mark Bomback
Cinematography: Ben Seresin
Music: Harry Gregson-Williams
My Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Run – ரன்-2020Run – ரன்-2020

இது பக்காவான திரில்லர் படம்.    படத்துல மெயின்னா அம்மா , மகள் இரண்டு கேரக்டர் தான். ஆனால் 2 மணி நேர படம் போனது தெரியாது.    படத்தின் கதையை பார்ப்போம்..    படத்தின் ஆரம்பத்தில் ஒரு மருத்துவமனையில் குறை

Get Out – 2017Get Out – 2017

Get Out Tamil Review  இது ஒரு மர்மம் கலந்த ஹாரர் படம்.  ஆனால் எனக்கு என்னமோ இந்த படம் சைக்கலாஜிகல் திரில்லர் மாதிரி தான் தெரியுது.  படம் ஸ்லோ பர்னர் வகை. கடைசி 30 நிமிடங்கள் படம் ஸ்பீடு எடுக்கும்

Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)

 இந்த படம் Prime Video recommendation section -ல் வந்தது அதுவும் தமிழ் ஆடியோவோட இருந்தது. ஹாரர், படம் summary+போஸ்டர்ஸ் பார்த்தா ஏலியன் படம் மாதிரி இருந்தது… ஹீரோ வேற  Nicholas Cage .இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த படத்தை