தி மெண்டலிஸ்ட்‌ (The Mentalist)

தி மெண்டலிஸ்ட்‌ (The Mentalist Tamil Review)

நாயகன் அதீத மூளைக்காரன் தாமாகவே முன்வந்து காவல்துறைக்கு உதவி செய்கிறார். குற்றம் நடந்த இடத்தில் உள்ள மிகச்சிறிய தடயங்களை கூட ஆராய்ந்து அதன் மூலமாக குற்றவாளிகளை கைது செய்ய உதவுகிறார். இது தவிர மற்றவர்களின் எண்ணங்கள் , செய்கைகளை அறிந்து கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதில் கில்லாடி.
தி மெண்டலிஸ்ட்‌ திரைப்பட விமர்சனம் தமிழில்,  The Mentalist series review in Tamil, . Amazon prime , அமேசான் ப்ரைமில் உள்ளது , Simon Baker, Robin Tunne
கடந்த காலத்தில் இதையே தொழிலாக கொண்டு பணம் சம்பாதித்த ஒரு ஏமாற்றுக்காரன்.
மனைவி, குழந்தை என மகிழ்ச்சியான அவருடைய குடும்பம் என்னவாகியது , ஏமாற்றுக்காரன் எப்படி காவல் துறையில் சேர்ந்தார் போன்ற பல கேள்விகளுக்கு விடை ஒவ்வொரு எபிசோடிலும் சிறிது சிறிதாக சொல்லப் படுகிறது.
நாயகன் (Simon Baker) மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய மேனரிசம் , பேச்சு திறைமைக்காக இந்த தொடரை பார்த்தவர்கள் நிறைய ‌பேர்.
முக்கியமான வில்லன் பாத்திரத்தில் Red John என்ற சீரியல் கில்லர் . இவர் நாயகனை‌ விட‌ பெரிய மூளைக்காரன். இவனுக்கும் நாயகனுக்கும் நடுவில் நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெற்றார் என்பது முடிவு.இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ‌Red John யார் என்று ‌நாயகன் உட்பட யாருக்குமே தெரியாது 5 வந்து சீசன் வரை..
நாயகி மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் Robin Tunney நன்றாக நடித்திருக்கிறார்… கியுட்டாக உள்ளார்…
மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் கொரியன் நடிகர் மற்ற அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மிக நீளமான தொடர்… 7 சீசன்கள்… ஒவ்வொரு சீசனுக்கும் 23 எபிசோட்கள்… ஆனால் எந்த இடத்திலும் தொய்வின்றி நகர்கிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். அமேசான் ப்ரைமில் உள்ளது . ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளது
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Crime Stories: India Detectives – 2021Crime Stories: India Detectives – 2021

இது ஒரு டாக்குமெண்டரி க்ரைம் மினி சீரிஸ்.  1 Season , 4 Episodes  Netflix ல தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ல் இருக்கு .  நம்ம US, UK Crime detective சீரிஸ் எல்லாம் நிறைய பார்த்துருப்போம். ஆனா

Saani Kaayidham – 2022Saani Kaayidham – 2022

ஒரு சாதாரண பழிவாங்கும் கதை அதை ஹாலிவுட் ஸ்டைலில் ராவாக எடுத்து இருக்கிறார்கள்.  படத்தின் இயக்குனர் Quentin Tarantino ரசிகரா இருப்பார் போல. பழி வாங்கும் காட்சிகள் கொடூர வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள்.  ஜாதி பிரச்சினை காரணமாக போலீஸ்

Raid 2: Berandal – ரெய்டு 2 (2014)Raid 2: Berandal – ரெய்டு 2 (2014)

Raid 2 Berandal movie Tamil Review  இது இந்தோனேசியாவில் இருந்து வந்த தற்காப்பு கலையை  உபயோகத்தி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படம். இது 2011 ல் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற Raid -1: Redemption – ரெய்டு