ஃப்ரின்ஜ் (Fringe)

ஃப்ரின்ஜ் (Fringe) Series Review In Tamil 

 இது ஒரு ‌மர்மம் மற்றும் அறிவியல் கலந்த மிகப்பெரிய தொடர்…. மொத்தமாக 100 எபிசோட்கள் 5 சீசன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது.
Fringe series review in Tamil , ஃப்ரின்ஜ் தொடர் விமர்சனம் தமிழில், available in Amazon prime , Anna Torv, Joshua Jackson , John Noble, J.J. Abrams
இந்த தொடரின் நீளம் காரணமாக எதை பற்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் மைய கரு மற்றும் முக்கியமான கதாபாத்திரங்கள் பற்றி பார்க்கலாம். 
இந்த தொடர் முழுவதும் Fringe Division எனும் FBI ன் மற்றொரு அங்கத்தை பற்றியது. Fringe Science பற்றிய வழக்குகளை பற்றி விசாரணை செய்கிறார்கள்.  
அது என்ன Fringe Science? 
இது நம்முடைய வழக்கமான அறிவியலுக்கு ‌அப்பாற்பட்டது. உதாரணமாக இறந்து போனவர்களின் மூளையை தொடர்பு கொண்டு பேசுவது, பேரலல் யுனிவர்சஸ் பற்றிய ஆராய்ச்சி, உயிரியல் ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சி என நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத பல களங்கள் உள்ளன.
இந்த பிரின்ஜ் டிவிசனில் உள்ளவர்களை பற்றி பார்க்கலாம். 
வால்டர் பிஷப் 
கொஞ்சம் கிறுக்கு தனமான ஒரு விஞ்ஞானி. 17 வருடங்கள் மனநல மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர். ஆனால் அதிபுத்திசாலி . இளம் வயதில் பல அறிவியல் சோதனைகளை வெற்றிகரமாக  நடத்தியவர். இவர் சோதனை செய்தவர்கள் பட்டியலில் சிறு குழந்தைகளும் அடக்கம். 
ஏஜன்ட் ஒலிவியா டன்கம் 
FBI ஏஜெண்ட் ஆக ‌வருகிறார். இளம் வயதில் வால்டரால் சோதனை செய்ய பட்டவர்களில் ஒருவர். வால்டர் பிஷப் மகன் பீட்டர் மீது காதலில் விழுகிறார். 
பீட்டர் பிஷப் 
வால்டர் பிஷப்பின் மகன். எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட அறிவாளி. இவரும் ஒலிவியா மீது காதலில் விழுகிறார். இவரைப் பற்றிய ஒரு ரகசியம் வால்டர் பிஷப்பிற்கு மட்டுமே தெரியும். அந்த ரகசியம் நமக்கு தெரியும் போது அட சொல்ல வைக்கிறது. 
Massive Dynamics  என்ற ஒரு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நிறுவியவர் வால்டர் பிஷப்பின் நண்பர் மற்றும் அவருடன் பணியாற்றிய விஞ்ஞானி. இதனை நிர்வாகம் செய்பவர் நினா ஷார்ப் . 
இவர்களை தவிர Observers எனும் ஒரு இயக்கம் இவர்களை கண்காணித்து வருகின்றனர். 
தொடர் ஆரம்பத்தில் பல வித்தியாசமான ஃப்ரின்ஜ் வழக்குகளை விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறியும் விதமாக அமைந்தது உள்ளது. ஆனால் பிற்பகுதியில் மொத்த கதையும் ‌பேரலல் யுனிவர்ஸ் மற்றும் நம்முடைய உலகம் அந்த உலகத்தோடு மோதாமல் தவிர்க்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு நகர்கிறது. 
100 எபிசோட்கள் கொண்ட தொடர் என்றாலும் தொய்வின்றி போகின்றது. 
கண்டிப்பாக பாருங்கள் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 
அமேசான் ப்ரைமில் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

A Clockwork Orange – 1971A Clockwork Orange – 1971

A Clockwork Orange – Tamil Review  டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. A Space Odessy , Full Metal Jacket , Shining போன்ற தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில்

Alienoid – 2022 – KoreanAlienoid – 2022 – Korean

Alienoid Korean Movie Review In Tamil வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள்.  ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும்.  Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic,

Sacred Games – 2018Sacred Games – 2018

Available on Netflix, 2 Seasons , Total 16 Episodes. ஒரு மிகப்பெரிய கடத்தல் மன்னன் மற்றும் பல நாடுகளில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு கொடூரமான கேங்ஸ்டர் திடீரென ஒரு நாள் மும்பைக்கு வருவான். ஒரு Bunker ல